தெய்வமே தன்னை தேர்ந்தெடுத்ததாக நம்புகிறேன் என்று குஷ்பூ மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தவர்கள். இவர் நடிகை மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.
இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
குஷ்பூ திரைப்பயணம்:
இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதோடு சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பு. அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாக தாக்கி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பூ அரசியல்:
பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி குஷ்பூ பாஜக-வில் இணைந்துக் கொண்டார். மேலும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது இவர் அரசியல், சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருச்சூரில் விஷ்ணுமாயா கோவிலின் சிறப்பு பூஜைக்காக குஷ்பூ சென்றிருக்கிறார். அதோடு கோவில் நிர்வாகமே சிறப்பு பூஜைக்காக குஷ்பூவை அழைத்து இருக்கிறார்கள்.
திருச்சூரில் விஷ்ணுமாயா கோவிலில் குஷ்பூ:
அது மட்டுமில்லாமல் வருடம் வருடம் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கோவில் நிர்வாகம் சிறப்பு பூஜை செய்யும். அந்த வகையில் இருந்த வருடம் நடிகை குஷ்பூவை கோவில் நிர்வாகம் தேர்ந்தெடுத்து சிறப்பு பூஜை செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாகத் தான் நடிகை குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் நடைபெற்ற நாரிபூஜை செய்ய நான் அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.
குஷ்பூ பதிவு:
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு அழைப்பார்கள். தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோயிலில் உள்ள அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் என்று சந்தோஷத்தில் கூறி இருக்கிறார்.