தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்த மோகன் தற்போது நீண்ட ஆண்டுகளுலு பின்னர் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மோகன்.
ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து 1999 ஆம் அன்புள்ள காதலக்கு என்ற படத்தை இயக்கினர். அதன் பின்னர் இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’தாதா 87’ ’பவுடர்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு முன்னிட்டு வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்தப் படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவிருப்பதாக இந்த படத்தின் இயக்குநர் விஜயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், மோகன்-குஷ்பூ இருவரும் ஒரே நேரத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தாலும் எந்தவொரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு படம் ஒன்றில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். தமிழில் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறையாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. குஷ்பு, மோகன் நடிக்கும் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்படவுள்ளன என்று கூறியுள்ளார்.
அதே போல தன்னுடைய திரை வாழ்க்கையில் முதல் முறையாக மோகனுடன் நடிப்பது குறித்து கூறியுள்ள குஷ்பூ ” என்று பதிவிட்டுள்ளார். கனவு நனவானது போல இருக்கிறது தமிழில் மோகனுடன் முதல் முறையாக மோகனுடன் நடிக்க இருக்கிறேன். மௌனராகம் படத்தில் மோகனை பார்த்ததில் இருந்தே அவருடன் நடிக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பை அளித்த விஜய்ஸ்ரீக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.