குரு பூர்ணிமா தினத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து குஷ்பூ போட்ட பதிவு. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
258
kushboo
- Advertisement -

குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு குஷ்பு அவர்கள் நன்றி தெரிவித்து இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தவர்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தமிழ் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ரோஜா மகளுக்கு இப்படி ஒரு திறமையா, பிரபல நடிகரிடம் அவர் வாங்கிய விருது – பெரு மகிழ்ச்சியில் ரோஜா.

குஷ்பூ திரைப்பயணம்:

இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார். இதில் ரஜினியின் முறைப்பெண்ணாக குஷ்பூ நடித்து இருப்பார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது.

-விளம்பரம்-

குஷ்பூவின் மீரா சீரியல்:

இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மீரா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்த தொடர் ஒளிபரப்பானதில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

குஷ்பூ அரசியல்:

முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பு. அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாக தாக்கி ட்விட்டரில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்துக் கொண்டார். தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு எப்போதும் சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் குஷ்பு அவர்கள் குரு பூர்ணிமாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு போட்டிருக்கிறார்.

குஷ்பூவின் நன்றி பதிவு:

அதில் அவர், இன்று குரு பூர்ணிமா 2022 முன்னிட்டு என்னை அரசியலுக்கு அழைத்து வந்து மனிதநேயம், சமத்துவம், அரசியல் கருணை, எப்போதும் சுய மரியாதையை விட வேறு எதுவும் பெரிதல்ல ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்த ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்கள் எப்போதும் நினைவு கூறப்படுவார். என் பார்வையில் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் இருப்பார். நன்றி அப்பா என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement