இதான் சோசியல் டிஸ்டன்ஸிங்கா – அப்போ யார் போட்டோ எடுத்தாங்க. கேலி செய்த ரசிகர். குஷ்பூ கொடுத்த பதிலடி.

0
978
kushboo
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ், லோகேஷ் கனகராஜ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

நடிகை குஷ்பூ கடந்த ஆண்டு தான் பா ஜ கவில் இணைந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அந்த கட்சியின் சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் குஷ்பூ. குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் சுந்தர்.சி பிரசாரம் செய்த நிலையில் கொரோனா தொற்றில் சிக்கினார்.

இதையும் பாருங்க : எதுக்கு இந்த கேவலமான விளம்பரம் – விவேக் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த ரம்யாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள். இதான் காரணம்.

- Advertisement -

அவர் மட்டுமல்லாது அவருடைய உறவினர்கள் இரண்டு பேரும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். தன் கணவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுமாறு தன் ரசிகர்களை கேட்டுக் கொண்டார் குஷ்பு. இப்படி ஒரு நிலையில் சுந்தர் சியின் உடல்நிலை தேறி உள்ளது. இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் தற்போது வெளியிட்ட பதிவில், “நண்பர்களே உங்கள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. எனது கணவர் சுந்தர்.சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

ஆனாலும் அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமையில் இருப்பார். அவர் எங்களின் இல்லத்தில் தங்குவார். 7 நாட்களுக்கு பிறகுதான் நான் அவரை பார்க்க முடியும். அனைவரின் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனிமைபடுத்திகொண்டுள்ள தனது கணவர் சுந்தர் சியை தூரத்தில் இருந்து அமர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார் குஷ்பூ.

-விளம்பரம்-

அதில், என்னுடைய கணவர் மருத்துவமனையில் இருந்து வந்த பின்னர் இப்படி தான் அவரை பார்த்தேன். மாஸ்க் அணியுங்கள் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று பதிவிட்டு இருந்தார் குஷ்பூ. இதற்கு நெட்டிசன் ஒருவர், அப்போ இந்த புகைப்படத்தை எடுத்த நபர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லையா என்று கேலியாக கமன்ட் செய்ய, அதற்கு பதில் அளித்த குஷ்பூ, பாதி செய்திய மட்டும் தெரிஞ்சிகிட்டா அரைவேக்காடு மூளனு தான் அர்த்தம். என்னுடைய குடும்ப நபர்கள் 3 பெரும் அவருடன் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் குஷ்பூ.

Advertisement