‘முஸ்லிமாக பிறந்து இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீ’ – மாணவி மரண விவகாரத்தில் விமர்சித்த நபருக்கு குஷ்பூவின் பதிலடி.

0
693
kushboo
- Advertisement -

மதமாற்றத்த்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு குரல் கொடுத்து குஷ்பு பேசியதற்கு சோசியல் மீடியாவில் தன்னை விமர்சித்த நபரை வெளுத்து வாங்கிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர் அரியலூரை சேர்ந்த மாணவி. இவர் அங்கு உள்ள மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விடுதி வார்டன் சகாயமேரி அந்த மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாற சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், மாணவி மாறுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் கோபம் அடைந்த விடுதி வார்டன் அனைத்து அறைகளையும் அந்த மாணவியை வைத்து சுத்தம் செய்யுமாறு துன்புறுத்தி கொடுமை செய்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. மேலும், அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பலரும் ஆர்ப்பாட்டம் செய்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.

- Advertisement -

மாணவியின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் குஷ்பூ:

இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர் கண்டனம் தெரிவித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், எல்லோர் வீட்டிலும் பெண் குழந்தை உள்ளது. இழந்தவர்களுக்கு மட்டும் தான் வலி தெரியும். திமுகவிற்கு இறந்தவர்களின் வழி தெரியாது. அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்வார்கள். இதுவரை முதல்வர் வாய் திறக்காதது ஏன்? மதமாற்றம் குறித்து இறந்த குழந்தை வீடியோ வாக்குமூலம் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை.

முதல்வரை விமர்சித்து குஷ்பூ சொன்னது:

இதுதான் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா? எல்லாவற்றிற்கும் குரல்கொடுக்கும் திருமாவளவன் எங்கே போனார்? என்று குஷ்பூ பயங்கரமாக பேசியிருந்தார். இவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விமர்சகர் ஒருவர் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை என்று முதல்வர் கூறமுடியுமா? முஸ்லிமாக பிறந்து இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீ தான் சொல்லணும் என்று குஸ்பூவை விமர்சித்து கூறி இருந்தார்.

-விளம்பரம்-

குஷ்பூ வெளுத்து வாங்கிய நபர்:

இதை பார்த்த குஷ்பு பதிலடி கொடுக்கும் வகையில் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் குஷ்பூ கூறி இருப்பது, டேய் லூசு, எவன்டா மதம் மாறினா? Marriage special act கேள்வி பட்டதே இல்லையா? இல்ல உன்ன மாதிரி கோமாளிக்கு யோசிக்கிற சக்தி இல்லையா? வேலை இருந்தா போய் பாரு. டாக்டர் கலைஞர் பேர் கெடுக்காதே. டிஎம்கே இருந்தப்ப நான் யாருன்னு உனக்கு தெரியலன்னா, மூடிட்டு போவியா என்று தன்னை விமர்சித்தவரை லெப்ட் ரைட் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார் குஷ்பு. தற்போது இவருடைய ட்விட் சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குஷ்பூ-சுந்தர்.சி திருமணம்:

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் குஷ்பூ. இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை குஷ்பூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். குஷ்பூ பிறப்பால் முஸ்லிம்மாக இருந்தாலும் சுந்தர் சியை இந்து முறைப்படிதான் அதாவது சிறப்பு திருமணச் சட்டப்படி தான் திருமணம் செய்து கொண்டார். குஷ்பூ திருமணத்திற்கு பிறகு சுந்தர் சியின் வழக்கப்படி அதாவது இந்து முறையை தான் பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement