தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோக்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வாய் அடைத்து போய் உள்ளார்கள். ஆமாங்க, நடிகை குஷ்பூ படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம ஸ்லிம்மாக மாறி உள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : புதிய அடுக்குமாடி வீடு, தங்கை கல்யாணம், இப்போ புதிய பிஸ்னஸ் – லாக்டவுனிலும் இப்படி ஒரு வளர்ச்சியா ?
இந்த படத்திற்காக இவர் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் குஷ்பூவின் இரண்டு மகள்களும் உடல் எடையை குறைத்து பலரையும் வியப்படைய செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது தனது மகள்களை விட படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் குஷ்பூ.
இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் குஷ்பூவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி கமன்ட் செய்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பூ, சாரி, நீங்க ரொம்ப லேட். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு 21 வருட தாமதம். இருந்தாலும் என் கணவரிடம் இதுபற்றி கேட்கிறேன் என்று மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார்.