இளம் வயதிலேயே தந்தை செய்த கொடுமை – வீட்டைவிட்டு வெளியேறி குஷ்பூ.

0
1086
- Advertisement -

குஷ்பூவின் இயற்பெயர் நக்கர்த் கான் இவர் செப்டம்பர் 29, 1970 இல் மும்பை மாகாணத்தில் உள்ள மகாராஷ்டிராவில் பிறந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் குஷ்புவிற்கு சினிமாவின் மேல் எவ்வித ஆசையும் இல்லாமல் வளர்ந்து வந்தார். சொல்ல போனால் குஷ்புவின் வீட்டில் டிவியே கிடையாது. அப்புறம் எப்படி சினிமாவில் நடிக்க வந்தார் என்றால் குஷ்பூவுடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். அதில் குஷ்பூவின் மூத்த சகோதரனின் நண்பர் ஒருவர் குஷ்பூவிடம் நடிப்பதற்கு வரியா என்று கேட்டுள்ளார். அதற்கு வெகுளித்தனமான குஷ்பூ ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தால் நடிக்க வருகிறேன் என்று கூறியுள்ளார். எப்படியாக 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

குஷ்பூவின் சுயநலமான தந்தை :-

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் சினிமா மூலமாக வரும் வருமானத்தை சினிமாக்காரர்கள் நேரடியாக தந்தையிடம் கொடுத்து விடுவார்களாம். குஷ்பூவுக்கு பணம் கொடுக்காமல் அவரே அனைத்தையும் செலவு செய்து காலி பண்ணி விடுவாராம். குஷ்புவின் தந்தை செய்யும் இந்த காரியம் சினிமாத்துறை துறையினரின் காதுக்கு சென்றவுடன் அவர்கள் குஷ்பூவிடமே பணத்தை கொடுத்து விடுவார்களாம். அப்போதும் அவர் தந்தை சும்மா விடமாட்டாராம் பணம் கேட்டு தொல்லை செய்து கொண்டே இருப்பாராம் அப்படியும் கொடுக்கவில்லை என்றால் கார் கண்ணாடி அல்லது காரையை அடித்து நொறுக்கி விடுவாராம்.

- Advertisement -

நாயகியாக நடித்த முதல் படம் :-

தந்தையின் இந்த செயலை கண்டு மனம் உடைந்த குஷ்பூ தந்தையை விட்டு விலகி சென்று விட்டார். அதன் பின்பு குஷ்பூ தன் தந்தையை இப்பொழுது வரை சந்தித்ததே இல்லையா இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது எதுவுமே தெரியாதாம். தனது தந்தையை விட்டு விலகி சென்ற குஷ்பூ சினிமா துறையில் முழுவதுமாக இறங்கி விட்டார். அப்படியாக 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

kushboo

குஷ்பூவுக்கு கோவில் :-

இந்த சமயத்தில் குஷ்பூக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்த ரசிகர் பட்டாளம் செய்த வேலையை எல்லாம் பார்த்தால் மிரண்டு விடுவீர்கள். அப்போதிலிருந்தே இப்போது வரை நடிகர்களுக்கு ஆங்காங்கே சில நேரங்களில் அவர்களின் ரசிகர்கள் சிலை திறப்பு விழா நடத்தினாலும், நடிகைகளுக்கு என்ற ஒரு சிலையோ யாருக்கும் வைத்ததே இல்லை. ஆனால் குஷ்பூ இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் குஷ்பூ என்று அவர் ரசிகர்கள் கோவிலை கட்டினார்கள். இந்த பெருமை குஷ்பூ தவிர யாருக்குமே கிடையாது. கோவிலை கட்டினார்கள் என்றால் குஷ்புவின் ரசிகர் பட்டாளம் எப்படி இருக்கும் குஷ்பூவின் மேல் எத்தளவு பைத்தியமாக இருந்திருப்பார்கள் எந்த அளவு திரையில் அவரை ரசித்திருப்பார்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

சுந்தர்.சி யுடன் திருமணம் :-

இந்த அளவுக்கு கொடி கட்டி பிறந்த குஷ்பூ பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். அதன்பின்பு சினிமா துறையில் படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமா குறைத்துக் கொண்டு வந்தார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

kushboo

குஷ்பூவின் அரசியல் வாழ்க்கை :-

குஷ்பூ திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடப்பது என இருந்த குஷ்பூ அதன்பின் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை திடீரென2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார் அதன் பின்னர் திமுகவிடம் சற்று மனக்கசப்பு ஏற்பட்ட பின் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின்பு நாளடைவில்26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் காங்கிரசில் பிறந்த குஷ்பூ அங்கே என்ன பிரச்சனை என்று தெரியவில்லை காங்கிரசிலிருந்து விலகினர் அதன்பின் சிறிது நாட்கள் அரசியலில் இருந்து விலகி இருந்த புஷ்பூ பின்னர் 12 அக்டோபர், 2020இல் குஷ்பு பாஜகவில் இணைந்தார் தற்போது வரை பாஜகவில் இருந்து வருகிறார்.

Advertisement