சுந்தர் சியின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட குஷ்பூ. ப்பா, எப்படி இருக்கார் பாருங்களே.

0
7343
sundar
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் இயற்பெயர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நடிகை குஷ்பூ அவர்கள் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்தார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை குஷ்பு அவர்கள் 2000 ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர், நடிகருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். இந்த தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள் இருக்கிறார்கள். தற்போது நடிகை குஷ்பு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : 2 வயது மகளுக்கு தாயக இருக்கும் அசின், இப்போ எப்படி இருகாங்க பாருங்க. வியந்து போன ரசிகர்கள்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் சின்னத்திரை தொடர்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை குஷ்பு அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி இவர் சோஷியல் மீடியாவில் தங்களுடைய குடும்ப புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பு அவர்கள் தன்னுடைய கணவர் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அது நடிகர் சுந்தர். சி அவர்கள் தன்னுடைய சிறு வயதில் இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சுந்தர். சியா!!! இது என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ என்ற படத்தினை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் தலைநகரம் என்ற படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
Advertisement