தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு 'வருஷம் 16' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும்.
https://twitter.com/khushsundar/status/1236844177465344000
பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கி வந்தார். மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள்.
மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று மார்ச் 9 ஆம் தேதி குஷ்பூ மற்றும் சுந்தர் சியின் 20 திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தங்களது திருமண நாளில் குஷ்பூ ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/khushsundar/status/1236875926824079360
அதாவது சுந்தர் சி திருமணத்திற்கு மிகவும் தாமதமாக வந்தார் என்று குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமலலாமல் குஷ்பூ எதை பதிவிட்டாலும் BJP`ஆதரவாளகர்கள் எதாவது எடக்கு மடக்காக கருத்துக்களை பதவிடுவார்கள்.அவர்களுக்கு குஷ்பூ ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்., மூளையில்லாத புத்தி இல்லாத முகமற்ற பெயரிடப்படாத பக்தாக்ளே கேளுங்கள். உங்கள் முகங்களைக் காட்ட தைரியம் இருந்தால் என் டைம் லைனுக்கு வாங்க. இந்த நல்ல நாளை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.





