பா ஜ கவில் இனைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் காங்கிரஸ்ஸில் இருந்து குஷ்பூ நீக்கம் – குஷ்பூயின் விளக்கம்.

0
1338
kushboo

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதிவையில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கப்பட்டுள்ளார். பா ஜ க கட்சியில் இணைவதாக வந்த செய்தியை அடுத்து இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு நடிகை குஷ்பூ கடிதம் எழுதியுள்ளார். அதில் ”காங்கிரஸ் கட்சி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மிகவும் மோசமான நிலையில் தோற்றபோது கட்சியில் சேர்ந்தவள் நான். பணத்துக்காகவோ புகழுக்காகவோ நான் கட்சியில் சேரவில்லை.

களத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தலைமையில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். உண்மையாக விரும்பும் என்னை போன்ற வரை உயர் பதவியில் இருப்பவர்கள் ஓடுகின்றனர்.நீண்ட யோசனைக்கு பின்னரே நான் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறேன் இதனுடன் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தையும் இணைத்திருக்கிறேன் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ராகுல் காந்தி ஜி அவர்களுக்கும் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளை இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் மீது இருக்கும் மரியாதை எப்போதும் மாறாது.

- Advertisement -

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பூ, ட்வீட் ஒன்றை செய்து இருந்தார். அதில் ‘ பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர். வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தை கொடுக்கும். கனவுகள் புதியவை. லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவின்போது ஒரு புகைப்படத்தையும் குஷ்பு வெளியிட்டிருக்கிறார். அதில் காவி நிறம் போன்ற உடையை குஷ்பு அணிந்திருக்கிறார். அந்தப் பதிவிற்கு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன், புரிந்துகொண்டோம் என கமெண்ட் செய்துள்ளார். எனவே, குஷ்பூ பா ஜ கவில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. குஷ்புவால் காங்கிரசுக்கு இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா தெரிவித்துள்ளார். அதே போல குஷ்புவின் விலகினால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement