4 விரல் பதியும் அளவிற்கு குஷ்பூ கன்னத்தில் அறைந்தது யார்? போட்டோவை கண்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

0
753
kushboo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980களில் இருந்து குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். பிறகு இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இதனிடையே குஷ்பூ அவர்கள் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பிறகும் குஷ்பூ தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், சீரியல் நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

குஷ்பூ நடித்த படம்:

சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என்று பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், வசூல் ரீதியாக திரைப்படம் வெற்றி பெற்றது.

சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் குஷ்பூ:

மேலும், குஷ்பூ அவர்கள் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பாஜக கட்சியின் உறுப்பினராக உள்ளார். அதோடு இவர் சமூக பிரச்சனைகள் பலவற்றிற்கு குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த அரியலூர் மாணவி தற்கொலை, கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை என பலவற்றிற்கு குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து இவரை பலரும் விமர்சித்து இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக குஷ்பூ குரல் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

குஷ்பூ பதிவிட்ட புகைப்படம்:

இது ஒரு பக்கம் இருக்க, குஷ்பு எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷூட் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகிறார். இந்த நிலையில் குஷ்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பேசுபொருளாக உள்ளது. அது என்னவென்றால், குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவள் கண்ணத்தில் யாரோ அறைந்தது போன்ற அடையாளத்துடன் போட்டோ வெளியிட்டு “Say No To Violence” என குறிப்பிட்டு இருக்கிறார்.

குஷ்பூ நடிக்கும் சீரியல்:

இதை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி அடைந்து என்ன பிரச்சனை? என்று கேட்டு வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், குஷ்பு தற்போது மீரா என்ற ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அந்த தொடரின் போட்டோ தான் இது. விரைவில் இந்த தொடர் ஒளிபரப்புகிறார்கள் மேலும், இந்த தொடரின் கதையை குஷ்புவே எழுதி வருகிறாராம். அந்த சீரியலின் விளம்பரமாக தான் இந்த புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.

Advertisement