தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பி. வாசு என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அந்த அளவிற்கு பி. வாசு வணிகரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் முதன் முதலாக பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் லாரன்ஸ்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார். பி வாசு இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது, அதில் சின்னத்தம்பி திரைப்படம் இவரது வாழ்வில் ஒரு மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த திரைப்படம் 9 திரையரங்குகளில் 356 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடித்த பிரபு மற்றும் குஷ்பூ ஆகிய இருவருக்கும் இந்த படத்திற்கு பின்னர் இப்படி ஒரு வெற்றி இன்று வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகளை கடந்து இருக்கிறது.

Advertisement

இந்த படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோதே இயக்குனர் பி வாசு நடிகன் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் சித்தப்பா வேடன் அணிந்தும் குஷ்பூ சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக ஒரு அழகான பெண்ணாக வந்து நிற்கும்படியான ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியை படம் பார்க்கும் போதே குஷ்புதான் சின்னத்தம்பி படத்தின் நாயகி என்று அப்போது முடிவு செய்து இருக்கிறார் இயக்குனர் சி வாசு. ஆனால், அப்போது குஷ்பூவிற்கு சரியாக தமிழ் பேச வராது.

சின்னத்தம்பி படம்:

இந்தி ஆங்கிலம் கலந்த தமிழ் தான் பேசுவார் அவருக்கு போன் மூலம் இந்த படத்தின் கதையை சொன்னதுமே இந்த மாதிரி கதை கிடைப்பதெல்லாம் ரொம்ப அபூர்வம் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று குஷ்பூ கூறியிருக்கிறார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தான் குஷ்பூ மற்றும் பிரபு ஜோடி சேர்ந்து நடிப்பதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கிறது ஆனால், குஷ்பு இல்லை என்றால் இந்த படத்தையே எடுக்க மாட்டேன் என்று ஒற்றை காலில் நின்று இருக்கிறார் பி வாசு. ஆனால் அவர் சொன்னதைப் போலவே இந்த படத்தின் வெற்றிக்கு குஷ்புவும் ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

Advertisement

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் வந்த குஷ்பவை ரசிக்கவே திரை அரங்குகளில் கூட்டம் கூடியது. இந்த படத்தில் இடம் பெற்ற அரைச்ச சந்தனம் பாடலில் வரும் குஷ்புவை மட்டும் காண தினமும் ரசிகர்கள் வந்து சென்றார்கள் அதேபோல இந்த படத்திற்கு பின் தான் குஷ்புவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருந்தார்கள். இந்த படம் வெளியான பின்னர் தான் குஷ்புவிற்கு கோவில் கட்டினார்கள். அதே போல ஞாயிற்றுக்கிழமை குஷ்பூவை பார்ப்பதற்காகவே பேருந்துகளில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் வந்து சென்றார்கள்.

Advertisement

குஷ்பூ பதிவிட்ட டீவ்ட்:

மேலும், இந்த படத்தை பார்த்துவிட்டு புஷ்புவிற்கு ரசிகர் ஒருவர் திருமணம் செய்தால் உங்களைத்தான் திருமணம் செய்வேன் என்று ரத்தத்தில் கூட கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.இப்படி ஒரு நிலையில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் சின்னத்தம்பி படத்தின் போஸ்டர் ஒன்றையும் பிரபு மற்றும் பி வாசுவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பாடிவிட்டு ‘ சின்னத்தம்பி, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சின்னத்தம்பி படம் குறித்து சொன்னது:

என் இதயம் எப்போதும் வாசு மற்றும் பிரபு ஆகியோருக்காக துடிக்கும். இளையராஜா அவர்களின் ஆன்மாவை கிளர்ந்தெழுக செய்த இசைக்காக என்றும் அவரை மறக்கவே முடியாது. இந்த படத்தை தயாரித்த மறைந்த தயாரிப்பாளருக்கு பாலு அவர்களுக்கு எனது நன்றி. சின்னத்தம்பி படத்தில் எனது நந்தினியின் கேரக்டர் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் பதிந்து உள்ளது. அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement