தன்னுடைய கனவு பற்றி குஷ்பூ மகள் அவந்திகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார்.
பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ 90களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். அதோடு சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். மேலும், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
குஷ்பூ குறித்த தகவல்:
தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் குஷ்பூ அவர்கள் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இதனால் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்து இருந்தார்கள். பின் குஷ்பூ மகள்கள் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய இருந்தார்கள்.

குஷ்பூ மகள் அவந்திகா பேட்டி:
மேலும், குஷ்புவின் மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்று வருகிறாராம். இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வமும் இருப்பதால் கூடிய விரைவிலேயே இவர் சினிமாத்துறையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவந்திகா, எந்த மொழியிலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். நல்ல கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வெற்றிகரமான சினிமா பயணத்திற்கு என்னுடைய உயரம் தடையாக இருப்பது எனக்கு தெரியும்.

சினிமா வாய்ப்பு பற்றி சொன்னது:
அதிகமான உயரத்தால் என்னுடைய முதல் வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்துக் காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இங்கு நடிகைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு நடைமுறைக்குள் நான் கிடையாது. பதின்ம பருவத்தில் நான் உடல் எடை அதிகமாக இருந்தேன். கண்ணாடி அணிந்திருந்தேன். இதனால் திரை நடிகைகளை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருந்தது. நான் ரொம்பவே வேதனையில் இருந்தேன்.

வாய்ப்பு கிடைக்காத காரணம்:
கொரோனாவிற்கு பின் என்னுடைய உடல் உருவத்தை மாற்றி வேறு வர்ஷனில் கொண்டு சென்று என்னுடைய கனவை அடைய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இது ஒரு சுயநலமான ஆசைதான். இருந்தாலுமே ஒரு நடிகராக ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு இருந்தால் அது ஆபத்து என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






