சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ துணை நடிகர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் அஜித் பண்ற பல படங்களில் நடித்த இவரை பலர் அறிந்திருக்க வாய்ப்பு கிடையாது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ் ஜி சூர்யா விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார். வாலி படத்தை போன்று இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார்.
விஜய் படங்களில் முதன் முறையாக அதிக வசூல் செய்தது இந்த திரைப்படம் தான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் வெளியாகி 22 வருடங்களை நிறைவு செய்தது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் #22YearsOfEvergreenKushi என்ற ஹேஷ் டேக்கை போட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர். அந்த வகையில் குஷி படத்தில் விஜய்யின் நண்பகராக நடித்தவர் நடிகர் Manish Borundia.
குஷி படத்தில் விஜய்யின் நண்பர் :
குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஷியாம் நடித்து இருப்பார். அதே போல இவரும் விஜய்யின் நண்பகராக நடித்து இருப்பார். அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் ஜோதிகா கல்லூரியில் விஜய்யை தேடிக் கொண்டிருப்பார். அப்போது ஜோதிகாவிடம் விஜய் போன் பபூத்தில் பேசிக்கொண்டு இருப்பதை கவனிக்கவில்லையா என்று இவர் தான் ஜோதிகாவிடம் சொல்வார். 90ஸ் கிட்ஸ்கள் இவரை பல படங்களில் பார்த்து இருக்கலாம்.
அஜித் வாங்கி கொடுத்த வாய்ப்பு :
ஆம், இவர் குஷி படத்திற்கு முன்பே அஜித்தின் அமர்க்களம் படத்தில் நடித்து இருப்பார். அமர்க்களம் படத்தில் அஜித்தின் என்ட்ரியில் அஜித் ஒருவரை அடித்து கடத்திக்கொண்டு போவார். அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரும் இவர்தான் சொல்லப்போனால் அஜித் தான் இவருக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதுகுறித்து பேசிய அவர் ‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். நான் என் தந்தையின் தொழிலைக் கவனித்துக் கொண்டே மாடலிங் செய்யத் தொடங்கினேன்.
அஜித்துடனான உறவு :
எங்கள் குடும்பத்திற்கு அஜித் சாரை நன்றாக தெரியும், நான் அவரை அடிக்கடி படப்பிடிப்புக்கு சென்று பார்ப்பேன். அமர்க்களத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒரு நாள் வரவில்லை. அப்போது அஜீத் சார் தான் என்னை அந்த வேடத்தில் நடிக்கச் சொல்லி என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நான் ஏற்கனவே நிறைய டிவி விளளம்பரங்களில் நடித்துள்ளேன். அதனால் கேமராவை எதிர்கொள்ளும் அனுபவம் எனக்குஇருந்தது. எனக்கு இப்படித்தான் சினிமா வாய்ப்பு தொடங்கியது’ என்றார்.
நடக்காமல் போன Pc ஸ்ரீராம் படம் :
குஷி படத்திற்கு பின்னர் இவர் பார்த்தேன் ரசித்தேன், மின்னலே,ஏய் நீ ரொம்ப அழகா இருக்க போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுபோக கன்னடத்தில் இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். மேலும், இவர் பி சி ஸ்ரீராம் இயக்கத்தில் ‘சொன்னால் தான் காதலா’ என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதை எண்ணி இவர் மிகவும் வருந்தி இருக்கிறார். அது நடந்து இருந்தால் இவர் ஒரு ஹீரோவாக தமிழில் நடித்து இருப்பார்.