வலிமைல குட்டிய புடிச்சிருந்ததா Bro – வாயை விட்டு வம்படியாக மாட்டிக்கொண்ட குட்டி. வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
508
valimai
- Advertisement -

வலிமை படத்தில் தன்னுடைய நடிப்பு குறித்து கேட்ட அஜித்தின் தம்பியை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு படத்தின் கதாநாயகி செய்யும் சண்டை காட்சிகள் எல்லாம் அற்புதமாக உள்ளது.

- Advertisement -

வலிமை படைத்த 100 வருட சாதனை :

வலிமை படைத்த 100 வருட சாதனை :இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி இருந்தது. அதோடு தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், வலிமை படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

அஜித் நடிக்கும் படங்கள்:

படம் வெளியாகி 5 நாட்களில் 100 கோடி வெளியாகி வசூல் செய்ததாகவும், 12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தற்போது வலிமை படம் 300 கோடியை நோக்கி வசூல் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அஜித்தின் தம்பி குட்டி :

அதோடு அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. வலிமை படம் என்னதான் 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தாலும் இந்த படத்தின் பல காட்சிகள் மீம் மெட்டீரியாக மாறியது. அதிலும் குறிப்பாக ‘அம்மா சாப்டு நாலு நாள்’ ஆச்சி போன்ற வசனங்கள் மீம் மெட்டீரியளாக மாறியது. அதே போல இந்த படத்தில் அஜித்தின் தம்பியாக குட்டி என்ற கதாபாத்திரமும் Trollகளுக்கு உள்ளானது.

வச்சி செய்யும் நெட்டிசன்கள் :

அதிலும் படத்தில் இவர் 1க்கு 100 முறை பேசிய ‘Bro’ என்ற வசனம் பெரும் கேலிக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் குட்டி கதாபாத்திரத்தில் நடித்த ராஜ் ஐயப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வலிமை படத்தில் தன்னுடைய நடிப்பு எப்படி இருந்தது’ என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா, மீம்களை போட்டு அவரை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Advertisement