சீக்கிரம் அங்க போயிடுனு சொல்லிட்டு வந்து இருக்கேன் – கனகாவை சந்தித்தது குறித்து குட்டி பத்மினி.

0
470
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, விஜயகாந்த், ராமராஜன் என்று டாப் நடிகர்களுடன் நடித்தவர் ‘கரகாட்டக்கார்ன்’ பட புகழ் கனகா தான். இவர் 80, 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின் முத்துக்குமாரை காணவில்லை என்றும், இவருக்கு திருமணம் ஆக வில்லை என்று எல்லாம் செய்திகள் வந்தது.

-விளம்பரம்-

இன்னும் இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு சில வருடங்களாகவே கனகாவை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தார். இதனால் பலரும் கனகா இறந்து விட்டார் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பி விட்டார்கள். பின் கடந்த ஆண்டு நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. மேலும், சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்து இருக்கிறார் கனகா.

- Advertisement -

கனகா குறித்த செய்தி:

இதனிடையே இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் கனகா தனிமை வாழ்கையினை கடத்தி இருக்கிறார். பின் சமீபத்தில் கனகா வீட்டில் தீ பிடித்து தீயணைப்பு வீரர்கள் அதை அணைத்து இருந்தார்கள். பின் கனகா மற்றும் அவரின் வீட்டின் நிலைமை குறித்தும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதை பார்த்த பலருமே கனகாவிற்கு என்ன ஆனது? பல வருடங்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையாக இருக்க காரணம் என்ன? ஏன் இப்படி இருக்கிறார்? என்று பல கேள்விகள் எழுந்தது. ஆனால், அதற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை.

கனகா லேட்டஸ்ட் புகைப்படம்:

தன்னுடைய தாயின் மறைவு, தனிப்பட்ட பிரச்சனை போன்ற பல காரணங்களினால் கனகா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வருவதும் இல்லை, யாரையும் சந்தித்து பேசுவதும் இல்லை. சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் மட்டுமே இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகையும், தயாரிப்பாளரும் ஆன குட்டி பத்மினி கனகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய அன்புக்குரிய தோழி தேவிகாவின் மகளும், என்னுடைய சகோதரி கனகாவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

-விளம்பரம்-

குட்டி பத்மினி பதிவு:

கனகா ரொம்ப நல்லா இருக்காங்க, சந்தோஷமாகவும் இருக்கிறாங்க. அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே சமாதானமானதாக சொல்கிறார்கள். கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. எதர்ச்சியாக கனகா வீட்டை கடந்து போகும் போது தான் அவருடைய வீட்டில் விளக்கு எரிவதை பார்த்தேன். அவர் யாரையும் சந்திப்பதில்லை என்று நிறைய செய்திகள் வருவதை நானும் கேள்விப்பட்டிருந்தேன். இருந்தாலும் அவர் வீட்டில் லைட் எரிந்திருந்ததால் உள்ளே ஆள் இருப்பார்கள் வெளியே வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அந்த சமயத்தில் தான் கனகா வெளியே வந்தார். பார்த்து பேசினேன். என்னை பார்த்ததுமே அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

கனகா குறித்து சொன்னது:

தேவிகா மேம் பத்தி நிறைய பேசினோம். நான் உங்க அம்மா மாதிரி என்று கனகாவிடம் சொன்னேன். அதற்கு அவர், நீங்க எப்படி என் அம்மாவாக முடியும்? அம்மாவோட படத்தில் நீங்க அவங்க பெண்ணாகத் தான் நடித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் எனக்கு அக்கா என்று சொன்னார். இப்படி ஒரு வீட்டில் ஏன் இருக்க? அழகான பிளாட்டில் இருந்தால் பாதுகாப்பு இருக்கும் என்று சொன்னேன். அதற்கு அவரும் கேட்டுக் கொண்டார். கனகாவுடைய இடத்தை சாலை விரிவாக்கத்தின் போது அரசாங்கம் எடுத்து கொண்டதால் அதற்கான காம்பன்சேஷன் தொகை வர வேண்டி இருக்கு என்று சொன்னார்.

கனகா நிலை:

உடனே நான் அவரிடம் இது விஷயமா சம்பந்தப்பட்டவர்களோடு பேசி அந்த தொகை வாங்கி தரேன் என்று சொல்லி இருக்கிறேன். உனக்கு கல்யாணம், குழந்தையும் இல்லை. இந்த சொத்து யாருக்கு போகப்போது, இப்படி இருக்க வேணாம். புது வீடு வாங்கு வாழ்க்கையை அனுபவி, வெளிநாட்டுக்கு டூர் போயிட்டு வா என்று பல விஷயங்கள் சொன்னேன். அவரும் வெளிநாடு பிடிக்கும் என்று சொன்னார். பின் நான், வெளிநாடு போய் சுத்தி பாரு, வாழ்க்கையை கொண்டாடி என்று சொன்னேன். சந்தோஷமாக கனகாவும் கேட்டுக்கொண்டார். ரொம்ப நாட்கள் பிறகு அவரை பார்த்தாலும் முன்னாடியே வந்து பார்த்திருக்கலாம் என்று என்னுடைய மனதிற்கு நெருடலாக இருந்தது என்று கூறியிருந்தார்.

Advertisement