ஜெய்சங்கர் ஜெயலலிதாக்கா வீட்டுல இருக்கிறார்னு நினைச்சுட்டு துப்பாக்கி எடுத்துட்டு ஜெயலலிதாக்கா வீட்டுக்கே போயிட்டார் – குட்டிபத்மினி பேச்சால் சர்ச்சை

0
1018
- Advertisement -

தென்னிந்திய திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குட்டிபத்மினி. 1959ஆம் ஆண்டு வெளிவந்த ஆம்பள அஞ்சுகம் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் குட்டிபத்மினி நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை குட்டிபத்மினி தனது யூடியூப் சேனலில் எம்ஜிஆர் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்து எம்ஜிஆர் ரசிகர்கள் பயங்கரமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குட்டி பத்மினி அவர்கள் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவர் எம்ஜிஆர், ஜெய்சங்கர், ஜெயலலிதா குறித்து பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, நடிகர் ஜெய்சங்கர் நன்றாக இங்கிலீஷ் பேசுவார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘நீ’ என்ற படத்தில் அவருடன் நடித்து இருந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருமே கலகலப்பாக இங்கிலீஷ் பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரேக் நேரத்தில் புத்தகங்களை எடுத்து வாசிக்க ஜெயலலிதா உட்கார்ந்திருப்பார். அப்போது ஜெயலலிதா, ஜெய்சங்கருடன் தான் உட்கார்ந்து இருப்பார். அந்த நாட்களில் அவர்களைப்பற்றி பயங்கர கிசுகிசு எல்லாம் பத்திரிகையில் வந்தது. இந்த தகவல் எப்படியோ எம்ஜிஆர் உடைய காதுக்கு போய்விட்டது.

- Advertisement -

ஒருநாள் எம்ஜிஆர் அவர்கள் ஜெய்சங்கர், ஜெயலலிதாவுக்காக தான் வீட்டில் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு ஜெயலலிதா வீட்டுக்கு போய்விட்டார். நல்லவேளை அன்னைக்கு ஜெய்சங்கர் அங்கு இருந்திருந்தால் எம்ஜிஆர் அவரை சுட்டு இருப்பார் என்று கூறி இருக்கிறார். இப்படி குட்டி பத்மினி பேசியதை பார்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் பயங்கரமாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக எம்.ஜி.ஆர்., பத்மினியுடன் நடித்த பிரசாத் என்கிற நடிகர்

ஜெயலலிதா - ஜெய்சங்கர்

இதுகுறித்து குட்டி பத்மினியை கடுமையாக பேசிய ஆடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி நீங்கள் எப்படி வாய்க்கு வந்ததெல்லாம் பேசலாம்? அவர்கள் அப்படி போனதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா? இப்படி பேசுறது தப்பு இல்லையா? கேட்டா எனக்கு தெரிந்ததை சொன்னேன் என்று சொல்கிறீர்கள். உங்களைப் பற்றி கூட தான் எனக்கு நன்றாக தெரியும். நானும் பேசி வீடியோ போடட்டுமா என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். இதனை தொடர்ந்து இதை அறிந்த குட்டி பத்மினி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எனக்கு தெரிந்த சில விஷயங்களை தான் பேசினேன். அதே நேரம் நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை.

-விளம்பரம்-
குட்டி பத்மினி

இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அதுபோக சிலர் என்னை பற்றி தவறாக பேசியிருந்தார்கள். நான் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த விஷயத்தை அப்படியே முடித்துவிடுங்கள். வீடியோவையும் நான் என்னுடைய யூடியூப் சேனலில் இருந்து எடுத்து விட்டேன். இதற்குப் பிறகும் உன்னைப்பற்றி எனக்கு தெரியும் வீடியோவை வெளியிடுவேன் என்று சொல்பவர்களுக்கு நான் என்ன சொல்வதென்று? தெரியவில்லை. யார் என்ன வீடியோ? போட்டாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை என்று கூறியிருக்கிறார். இதனிடையே இது குறித்து நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய்யிடம் கேட்டதற்கு அவர், நோ கமெண்ட்ஸ், நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று முடித்திருக்கிறார். இப்படி குட்டி பத்மினி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement