நான் இப்படி ஆனதற்கு காரணமே நடிகை ரம்யா தான் – குட்டி ராதிகா பகிர்ந்த சுவாரசிய தகவல்

0
107
- Advertisement -

தமிழில் 2003 இல் ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்தவர் ராதிகா குமாரசாமி. இவரை செல்லமாக குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்டார். இவர் தனது 13வது வயதிலேயே 2002 இல் நிணங்கி என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆக அதே ஆண்டில் 5 படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இயற்கை திரைப்படத்திற்கு பின் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

இயற்கை படத்திற்கு பின் இவர் வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா போன்ற சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், எந்த படமும் சரியாக ஓடவில்லை. இருப்பினும் கன்னடத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதேபோல் தெலுங்கிலும் இவர் சில படங்களில் தான் நடித்திருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகை குட்டி ராதிகா அவர்கள் கடந்த 2000 ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ரத்தன் குமார் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

குட்டி ராதிகா குறித்த தகவல்:

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இதை அடுத்து இவர் 2007 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். தற்போதும் இவர் நடித்து கொண்டு தான் வருகிறார். அதோடு
தற்போது இருக்கும் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அழகாக ராதிகா இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே அளித்த பேட்டியில் ராதிகா தன் அழகின் ரகசியம் பற்றி சொன்னது, நான் முதன்முதலில் இப்படி எல்லாம் கிடையாது.

குட்டி ராதிகா பேட்டி:

என்னுடைய அழகு பற்றி எதுவும் தெரியாது. நான் இப்படி மாற காரணம் நடிகை ரம்யா தான். ரம்யாவிடம் இருந்து தான் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அழகு குறிப்புகள் எல்லாம் அவர் தான் சொல்லிக் கொடுத்தது. நெயில் வொர்க், நெயில் பாலிஷ், எப்படி மேட்சிங்கா போடணும் என்று கூட எனக்கு தெரியாது. லக்கி படத்தின் சமயத்தில் தான் நடிகை ரம்யாவுடன் நான் நெருங்கி பழக ஆரம்பித்தேன். அப்போது அவர் எனக்கு எப்படி ஹேர் ஸ்டைல் செய்யணும், நெயில் பாலிஷ் போடணும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். இன்று நான் இவ்வளவு ஸ்டைலாக இருப்பதற்கு காரணம் நடிகை ரம்யா தான் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ரம்யா பற்றி சொன்னது:

மேலும், 2016 ஆம் ஆண்டு லக்கி படம் வெளியான போது அளித்த பேட்டியில் ரம்யா, நானும் ராதிகாவும் நட்பு ரீதியில் நெருக்கமாக இருந்தோம். ராதிகா அற்புதமான நடிகை, நல்ல பெண். அவர் எனக்காக லக்கி படத்தை தயாரித்தார். ராதிகா ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வளர்ந்தவர். சினிமாக்குள் அவர் நுழைந்தபோது நானுமே உதவி செய்தேன். அவர் ரொம்ப நல்ல பெண் என்பதால் எனக்கு எப்போதும் அவர் மீது ஒரு பாசம் இருக்கு. தேர்தல் சமயத்திலும் அவர் என் பக்கம் தான் இருந்தார். நான் வெற்றி பெற வேண்டும் என்று அவர் ரொம்ப ஆசைப்பட்டார் என்று கூறி இருந்தார்.

ரம்யா குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் திடீரெனெ சினிமாவிற்கு விடை கொடுத்துவிட்டார். அவர் எப்போது திரும்பி வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள். ரம்யா சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கிவிட்டார். எம்பி பதவிக்கு திடீர் என உயர்ந்த இவர் தற்போது எம்பி பதிவிற்கு வந்தாலும் ஏதோ காரணங்களால் அந்த பதவியை தக்க வைத்துக் கொள்ளாமல் அரசியலில் இருந்து விலகி விட்டார். நல்ல கதை கிடைத்தால் விரைவில் சினிமாவுக்கு வருவேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.

Advertisement