காரே அசையல. நிஜமாகவே வெட்டுக்கிளி தாக்குதளுக்கு ஆளான சூர்யா படக்குழு. இயக்குனர் ஷாக்கிங் பேட்டி.

0
4306
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒரு நபர் கெட்ட வைரஸை பரப்புவது போன்ற காட்சி காண்பிக்கப்படும். தற்போது உலகம் முழுவதும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
அதே போல சமீபத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகளை பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருக்கும். தற்போது அதே போல் வடநாட்டில் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை நெட்டிசன்கள் இரண்டு நாளாக சூர்யாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். சூர்யா நடித்த படங்களில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜத்திலேயே நடக்கிறது.

-விளம்பரம்-

இதனால் சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மகாராஷ்ட்ரா, டெல்லி என வட மாநிலங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு அட்டகாசம் குறித்து இயக்குநர் கே.வி. ஆனந்த் அவர்கள் காப்பான் படத்தில் விளக்கமாக தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெட்டுக்கிளியின் கோர பசிக்கு இரையாவதால் விவசாயிகள் வேதனையில் வாடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் ஒரு பேட்டியில் கூறி இருப்பது, எந்தவொரு கதையும் தானாக யோசிக்கவில்லை.

- Advertisement -

செய்தித் தாள்களில் வருவது மற்றும் முன்னதாக நடந்த விசயங்களை தான் படமாக ஆக்குகிறேன். மடகாஸ்கரில் மாற்றான் படத்தின் ஷூட்டிங்கை எடுத்துக் கொண்டு இருந்த போது தான் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை நான் நேரிலேயே பார்த்தேன். சுமார் 30 நிமிடங்கள் எங்கள் கார் அசையவே இல்லை. அது குறித்து ஓட்டுநரிடம் கேட்ட போது தான் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் அடிக்கடி இதுபோன்ற வெட்டுக்கிளி படையெடுப்புகள் நிகழும் என்றார். பின்னர் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து ஆழமாக படிக்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு நாட்டிலும் அந்த அந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல வெட்டுக்கிளிகளின் வீரியம் இருக்கும் என்றும் வெட்டுக்கிளிகள் போல பயிர்களை நாசம் செய்யும் பல வகையான பூச்சிகள் இருப்பதாகவும் படித்தேன். அதில் ஒன்றான சீலிபெரா எனும் வகையைத் தான் காப்பான் படத்தில் வைத்தேன். மேலும், இந்தியாவில் இதுபோன்ற அட்டகாசம் நடப்பது முதல் முறையல்ல. கடந்த 1903ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை நடைபெற்றதற்கான சான்றுகள் இருக்கின்றன. மும்பை நகரில் தான் வெட்டுக்கிளி தாக்குதல் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை இதுபோன்ற தாக்குதல் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

-விளம்பரம்-
Advertisement