அஜித்தை பத்தி பேசுனீங்கனா சோடா பாட்டில் தான் பறக்கும்! துப்புரவு பாட்டி கோபம் ?

0
4105
ajith

தமிழ் சினிமாவில் இரு துருவங்களில் ஒன்று விஜய் மற்றொன்று அஜித். இவருக்கும் மிகப்பெரிய ஒப்பனிங் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ajith இருவரும் பல நற்காரியங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றனர். விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல நற்காரியங்களை அவ்வப்போது மக்களுக்கு செய்து வருகின்றார். அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், யாருக்கும் தெரியாமல் நல்லது செய்துவருகிறார். அவருக்கு பெரும்பாலும் ஆண்கள் மட்டும் ரசிகர்கள் என்று கூறி வரும் நிலையில் தற்போது அஜித்துக்காக ஒரு வயதான பாட்டி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், அஜித் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு பல உதவிகள் மற்றும் கொட்டிவாக்கத்தில் ஒருவருக்கு கிட்னி மாற்றும் அருவை சிகிச்சை செய்ததாகவும் கூறுகிறார். மேலும், அஜித்தை பற்றி தப்பாக பேசினால் ‘சோடா பாட்டில் பறக்கும்’ என அந்த வயதான பாட்டி வேலை செய்து கொண்டே, மிரட்டும் மெட்ராஸ் தமிழில் பேசி அஜித்துக்காக சப்போர்ட் செய்கிறார் அந்த வயதான பாட்டி.