இந்தியில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நடிகர் அமீதாப் பட்சன், ஆனால் இவரது மகனான அபிஷேக் பட்சன் பாலிவுட் சினிமாவின் பிளாப் ஸ்டார் என்றே அழைக்கப்படுகிறார். இது வரை பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து அதிகப்படியான பிலாப் படங்களை கொடுத்த நடிகர்களில் அபிஷேக் தான் முதல் இடத்தில் இருப்பவர்.
இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு அபிஷேக் பட்சன் தற்போது “Manmarzian ” என்ற புதிய படத்தில் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு நடித்துள்ளார். இந்த படத்தை “இமைக்கா நொடிகள் “படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த அனுரங் கஷ்யப்பும் இயக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியான இந்த படமும் மாபெரும் பிளாப் அடைந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் அபிஷேக் பட்சன், கடந்த 2012 வெளியான ஷாரத் என்ற என்னுடைய படம் வெளியான போது திரையரங்கிற்கு சென்று ரசிகர்களிடம் இந்த படம் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதை தெரிந்துகொள்ள ஒரு பிரபல திரையரங்கிற்கு சென்ரிருந்தேன், அப்போது என்னிடம் வந்த பெண் ஒருவர் என் கன்னத்தில் பளார் என்று அறைந்து நடிப்பதை நிறுத்திவிடு. நீயெல்லாம் நடித்து ஏன் குடும்ப பெயரை கெடுக்கிறாய் என கூறியதாக அபிஷேக் பட்சன் தெரிவித்துள்ளார்.
அதே போல சமீபத்தில் ட்விட்டவ்ர் பக்கத்தில் ஒரு டாக்டர் அவர்கள் என்னுடைய Manmarzian படத்தை பார்த்துவிட்டு, ஒரு ஹிட் படத்தை பிளாப் படமாக மாற்ற உங்களால் தான் முடியும், பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு பாவ் பஜ்ஜி கடை வைத்து விடுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்போது இவையெல்லாம் நினைத்தான் தனக்கு சிரிப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.