அட, கொடுமையே கடைசில லேடி சூப்பர் ஸ்டாரா உஜாலா விளம்பரத்துல நடிக்க வச்சிட்டாய்ங்களே.

0
7426
nayanthara
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள். இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர்.

-விளம்பரம்-

பின்னர் தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர், தமிழ் மொழியில் மெஹா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

- Advertisement -

நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு குடும்பபாங்கான தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். அப்படி இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்து விடுகிறது. இறுதியாக விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த நயன் தற்போது முக்குத்தி அம்மன், அண்ணாத்தே போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும்,நடிகை நயந்தாரா ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் என்பது தெரியும். அதே போல சினிமாவில் வந்த பின்னர் இவர் ஒரு சில விளம்பர படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது உஜாலா விளம்பரத்தில் நடித்துள்ளார் நயன். கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா முடங்கி இருக்கும் நிலையில் நயன் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement