தனது முதுகில் பெரிய டாட்டூ குத்தும் நயன் – வைரலாகும் புகைப்படம்.

0
1377
nayanthara
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் புகைந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாட்டில் ஊர் சுற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் நயன்தாரா பிறந்தநாளை நடிகர் விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் வெகு சிறப்பாக கொண்டாடினார்.மேலும், நயனின் பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவளித்து கொண்டாடினர் விக்னேஷ் சிவன். தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்துள்ளார் நயன்தாரா.

- Advertisement -

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்த விஷயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆரம்பத்தில் சிம்புவை காதலித்து வந்த நயன்தாரா பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து விட்டார். அதன் பின்னர் திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வந்தார். இதனால் பிரபுதேவாவின் குடும்பத்திலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. பிரபுதேவா மீது இருந்த அதீத காதலால் நயன்தாரா பிரபுதேவா பெயரை தனது கையில்’பிரபு’ என்று பச்சை குத்திக் கொண்டார்.

பின்னர் பிரபுதேவாவுடன் தனது காதலை முறித்துக் கொண்ட நயன்தாரா பின்னர் தனது கையிலிருந்த ‘பிரபு’ என்ற டாட்டூவை ‘பாசிட்டிவிட்டி’ என்று மாற்றிக் கொண்டார். கையில் மட்டுமல்லாது தனது கழுத்தின் பின் புறத்தில் கூட ஒரு டாட்டூவை குத்திகொண்டுள்ளார் நயன்தாரா. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, தனது முதுகில் பெரிய டாட்டூவை குத்திக்கொள்ளும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இது எதோ படத்திற்காக குத்தப்பட்ட தற்காலிகமான டாட்டூ என்று தான் தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement