லக்ஷ்மி குறும்பட நாயகி லக்ஷ்மிப்ரியாவின் அடுத்த படம்! ரிலீஸ் தேதி இதோ.!

0
1158
lakshmi

மலையாள பட உலகின் இளம் ஸ்டார்களில் ஒருவரான நிவின் பாலி மலையாளத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். வித்யாசமான் படங்களில் நடித்து வரும் அவருக்கு அங்கு மட்டுமல்ல தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர்.
nivin pauli ‘ப்ரேமம்’ படத்திற்குப் பிறகு அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். முன்னர் நேரம் படத்தின் மூலம் தமிழில் நேரடியாகவே நடித்த அவர் அதற்கு பின் நேரடியாக எந்த ஒரு தமிழ் படத்திலும் நடித்தது இல்லை.

தற்போது ‘ரிச்சி’ என்ற படத்தில் நேரடியாக தமிழில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மிஷ்கினின் உதவி இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.
lakshmi இந்த படத்தில் தான் சர்ச்சையை கிளப்பிய ‘லக்ஷ்மி’ குறும்படத்தின் நாயகி லட்சுமி ப்ரியா நடித்துள்ளார். இப்படித்தில் நிவின் பாலிக்கு இரண்டு நாயகிகள் உள்ளனர், ஒன்று விக்ரம் வேதா புகழ் ‘ஷ்ரதா ஶ்ரீநாத்’ மற்றொன்று ‘லட்சுமி ப்ரியா’.

படத்தில் ‘சதுரங்க வேட்டை’ நட்டி என்ற நட்ராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் விஷாலின் தந்தை ஜீ.கே ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்கள், குறும்படத்தில் நடித்து அபார திறமையை வெளிப்படுத்திய ‘லட்சுமி ப்ரியாவின்’ நடிப்பை பெரிய திரையில் பார்க்க் ஆர்வமாக உள்ளனர்.
lakshmi என்னதான் லக்ஷ்மி குறும்படத்திற்கு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், திரைத்துறையின் பார்வையில் அப்படத்தில் நடித்த ‘லட்சுமி ப்ரியாவின்’ அபார நடிப்பு தான் தெரிந்திருக்கிறது. இந்த குறும்படத்தினால் அவருக்கு இன்னும் பல பட வாய்ப்புகள் வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.மேலும், டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.