தான் Single இல்லை என்று சொன்ன லட்சுமி மேனன் – திருமணம் செய்துகொள்ள கேட்ட தன்னை விட வயதில் சிறிய இளைஞர் . அதற்கு லட்சுமி மேனன் சொன்ன பதிலை பாருங்க.

0
2458
lakshmi

தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்ட ரசிகருக்கு நடிகை லட்சுமி மேனன் கேலியாக பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார். சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனின் சில புகைப்படங்கள் வைரலானது. அதில் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்ன கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை லட்சுமிமேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்களா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு லட்சுமி மேனன் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

அதே போல மற்றொரு ரசிகர் நீங்க திருமணத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு திருமணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட Shit என்று கூறியுள்ளார். அதே போல மற்றொரு ரசிகர் ‘என்னை திருமணம் செய்துகொள்வீர்களா? எனக்கு 22 வயது தான்’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை லட்சுமி மேனன் ‘யாருப்பா நீ நல்ல இருக்கிறது புடிக்கலயா’ என்று கேலியாக பதில் அளித்துள்ளார். நடிகை லட்சுமி மேனனுக்கு 24 வயது

-விளம்பரம்-
Advertisement