பெரியாரின் அந்த கொள்கையில் நான் மறுபட்டவள் ஆனா, நான் மொட்டை அடித்துக்கொண்டதற்கு அவர் தான் காரணம் – லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
537
- Advertisement -

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் வனிதாவின் நான்காம் திருமணத்திற்கு பஞ்சாயத்து செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதோடு இவரது நிகழ்ச்சியில் வந்த பெண் ஒருவர் சமீபத்தில் சாமியார் ஆனதை பார்த்து அதற்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். கடந்த மாதம் கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சனைக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

பெரியார் பற்றி லக்ஷ்மி கூறியது:

இந்த நிலையில் யுத்தம் செய் படத்தில் இவர் மொட்டை அடித்ததற்கான காரணத்தை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனது அப்பா ராஜாஜியுடன் நெருக்கமாக இருந்த அரசியல் ஆளுமை. ஆனால், பெரியாரின் மறுமலர்ச்சி கொள்கைகள் பற்றி எங்களிடம் நிறைய பேசுவார். தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வழங்கி வந்த போது அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எனக்கு ‘பெண் ஏன் அடிமை ஆனாள்’? என்கிற பெரியாரின் புத்தகத்தை பரிசளித்தார். அதற்கு முன்பும் பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தனர்.

படத்தில் மொட்டை அடிக்க காரணம்:

அப்போதும் இதே புத்தகத்தை எனக்கு பரிசாக கொடுத்தார்கள். அந்த புத்தகம் என்னை அதிகமாக பாதித்தது. அந்த புத்தகத்தின் பின்னே இருந்த சிந்தனை வீச்சும் முறைமை அசாதாரணமானது. பிறகு யுத்தம் செய் படத்தில் நடித்தபோது நான் மொட்டை அடித்துக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கவில்லை. போட, ஆஃப்டர் ஆல் ஹேர்தானே என்று ஜாலியாக மொட்டையடித்துக் கொண்டேன். அதற்கு பெரியார் தான் காரணம். மொட்டை அடித்துக்கொண்டு ஷவரின் கீழ் நின்ற போது கிடைத்த விடுதலை உணர்வு அளப்பரியது.

-விளம்பரம்-

பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் புத்தகம்:

பெரியாரின் கடவுள் நம்பிக்கை சார்ந்த கொள்கையில் நாள் மாறுபட்டவர். ஆனால், தீண்டாமை சமத்துவமின்மை பெண்ணடிமைத்தனம் போன்றவற்றுக்கு எதிராக செயல்பட்டு பெரியார் கொண்டுவந்த மாற்றங்களின் காரணமாக தான் இன்று தமிழ்நாடு தனித்துவமான கலாச்சாரம் கொண்டதாக இருக்கிறது. அந்த விஷயத்தில் நான் பெரியாரின் தீவிர ரசிகை. மேலும், திருமணப் பரிசாக எனது பெரிய மாமனார் எனக்கு திருக்குறளை பரிசளித்தார். எப்போதாவது குழப்பம் ஏற்பட்டால் அந்த திருக்குறள் புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து கண்ணில் படும் குரலையும் அதன் விளக்கத்தையும் வாசித்தால் அங்கே தீர்வு இருக்கும். அப்படி ஒரு வேதம் அது.

திரைப்பயணம் உதவி செய்த புத்தகம்:

நான் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன்பு எனக்கு பரிசளிக்கப்பட்ட மற்றொரு புத்தகம் சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி’? புத்தகம். அது திரைக்கதை எழுதும் தன்னம்பிக்கை கற்றுக்கொடுத்தது. ஆனால், தமிழகத்தில் திரைக்கதையை எழுத முடியும் என்கிற தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது பாரதியார் கவிதைகள் நூல். மொழியின் ஆற்றலை பாரதியார் வழியாக பெற்றேன். பாரதியார் கவிதைகளை எனக்கு பரிசளித்தவர் வானதி ஸ்ரீனிவாசன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.

Advertisement