தனுஷ் இல்லை, சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்ய இருந்தது லட்சுமி ராமகிருஷ்ணன் தான். இதோ ஒரு பிளாஸ் பேக் பதிவு.

0
242
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படுத்தி இன்று முன்னனி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது.இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு டான் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது.இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். எனவே, சிவகார்த்திகேயன் அறிமுகமானது 3 படத்தில் தான் என்றும் சிலர் கூறுவதும் உண்டு. அட அவ்வளவு எங்க நம்ம தல நடித்த ஏகன் படத்தில் கூட சிவகார்த்திகேயன் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார்.

-விளம்பரம்-

ஆனால், ஹீரோவாக அறிமுகமாகி இருக்க வேண்டியது என்னவோ குறள் 786 என்ற பதில் மூலம் தான் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது. இந்த படத்தை இயக்கியது வேறு யாரும் இல்லை நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தான். இதுகுறித்து கடந்த 2020 ஆம் ஆண்டே லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ட்விட்டரில் ரசிகர் ஒருவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் குறள் 786 குறும்படத்தை ஏன் இன்னும் ரிலீஸ் பண்ண வில்லை? எப்போது ரிலீஸ் செய்வீர்கள்? என்று கேட்டு ட்விட்டரில் கேள்வியெழுப்பினார்.

அந்த ட்வீட்டை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் ‘அது குறும்படம் இல்ல. அது சிவகார்த்திகேயனுடன் நான் இயக்குனராக அறிமுகமாக வேண்டிய படம்.நான் தான் அவரை ஹீரோவாக சினிமா உலகில் அறிமுகம் செய்ய வைப்பதாக இருந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. அதற்கு பிறகு தான் அவர் மெரினா படத்தில் நடித்தார். குறள் 786 படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் அபிநயா தான் ஹீரோயினியாக நடிக்க இருந்தது. நான் அவருடன் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் குறள் 786 படம் பண்ணுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அவருக்கு முதலில் வாய்ப்பு தர இருந்த என்னை, யார் என்றே தெரியாது என்று கூறியது தனக்கு வருத்தம் அளிக்கிறது’ எனவும் சோகத்துடன் கூறியிருந்தார்.

Advertisement