இந்த மாதிரி படங்கள் எடுக்கறதால சமூகம் எப்படி இருக்க போது – ஜெயிலர் படத்தை சூசகமாக விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
557
LakshmiRamakrsihnan
- Advertisement -

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் வன்முறை அதிகமாகி விட்டது. அதனை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம். என்று லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

-விளம்பரம்-

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார்.

திரைப்படங்கள் குறித்து பேசியது:

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் வன்முறை அதிகமாகி விட்டது. அதனை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம். தலையை வெட்டுவதாக இருக்கட்டும், ரத்தம் திரிப்பதாக இருக்கட்டும் முகத்தில் இருந்து ரத்தம் வருவது போலும் பற்களில் இருந்து ரத்தம்  வழிவதாக இருக்கட்டும் கொடூரமாக கொலை பண்றது இருக்கட்டும். லைட்டை போட்டு ஷார்ட் சூப்பராக வைத்து அது போன்ற காட்சிகளை எடுப்பதனால் பத்து வருடங்களுக்கு சமூகம் எப்படி இருக்க போகிறது. இதற்கு எந்தவித எதிர் வினையும் இருக்காதா.? 

-விளம்பரம்-

இதுபோன்ற காட்சிகளை வெளிப்பகுதி தற்போது சாதாரணம் ஆகிவிட்டது போல மக்களிடையும் சிறிய குழந்தைகளின் மனதில் கொண்டு வராதா? அதனை தற்போது கொண்டாடி கொண்டு வருகின்றனர் இந்த படங்களை நடிப்பது பெரிய பெரிய நடிகர்கள் இந்த படங்களை எடுப்பது பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் இந்த படங்களை இயக்குவது பெரிய பெரிய இயக்குனர்கள். இது போன்ற திரைப்படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பது மக்கள். இது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும் நாளைய தலைமுறை எப்படி இருக்க போகிறது என்று.

நான் எதிரில் நடிகர் தனுஷை மட்டும் வைத்துக் கொண்டு மனதில் பேசவில்லை. சர்ச்சையை சர்ச்சைக்குள் போக வேண்டும் என்றால் அது பற்றி நான் பேசுவேன். முக்கிய நடிகர்கள் என்றால் அது தமிழ் நடிகர்கள் அவர்களுக்கும் ஹிந்தி நடிகர்களும் தான். நான் ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயரை சொன்னால் என்னை விட்டு விடுவார்களா? நாம் அனைவரும் வன்முறையை கொண்டாடுகிறோம் அதைப்பற்றி நான் பேசுகிறேன்.என்று கூறினார். மேலும் அவர் இந்திய நாட்டின் பெயர் மாற்றம் பற்றி பேசிய அவர் இந்தியாவில் மாற்ற நிறைய இருக்கிறது என்றும் கூறினார். அது குறித்த சர்ச்சையில் நான் சிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.   

Advertisement