மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனை, சிகிச்சை அளித்த 20 மருத்துவர்கள் ஆனாலும் – உண்மையில் லட்சுமி ராம்கி இரும்பு பெண்மணி தான்.

0
1287
lakshmi
- Advertisement -

இப்படி ஒரு சோகத்தை வைத்துக்கொண்டு தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இருக்கிறாரா! என்று ரசிகர்கள் கூறிவரும் ஆறுதல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும். ஆனால், அதற்கு முன்னே இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் மலையாள மொழி மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார். இருந்தாலும், இவர் தமிழ் மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதிலும் இயக்குனர் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்து இருந்தார்.

- Advertisement -

லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்த தகவல்:

இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காகவே லட்சுமி ராமகிருஷ்ணன் மொட்டை அடித்துக் கொண்டு நடித்திருந்தார். இந்த செயல் பலரால் பாராட்டப்பட்டது. அதற்காக இவர் பல விருதுகளையும் பெற்றிருந்தார். மேலும், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படங்கள்:

அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். இதனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படம்:

தற்போது இவர் தான் இயக்கும் புது படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்திருக்கிறார். இவர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர் தன்னுடைய மகளை குறித்து போட்டுள்ள பதிவு பலரையும் மனதளவில் உலுக்கி இருக்கிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்ட பதிவு:

அதாவது, இனிய ஓணம் நண்பர்களே. வீட்டில் ஒரு சிறிய கொண்டாட்டம் இருந்தது. எங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆறு மாதங்கள் ஆகிறது. இது ஒரு நெருக்கடி. ஆனால், கடவுள் அருளால் 20 மருத்தவர்கள் தங்களால் இயன்றதை செய்தார்கள். இறுதியாக டாக்டர் ராமசுப்பு இங்கு வரை எங்களுக்கு வழி நடத்தினார். ஸ்ரேயா முழுமையாக குணமடையவில்லை. இருந்தாலும், சிறப்பாக செயல்படுகிறார் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆறுதலாக கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

Advertisement