குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த முறை நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார்.

அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார். கடந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள். சினிமா, சீரியலை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானோர் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள். அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார்.
குக் வித் கோமாளி:
கடந்த சீசன் தான் பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தது. காரணம், பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து மணிமேகலை -பிரியங்கா இடையே சலசலப்பு ஏற்பட்டு நிகழ்ச்சியை விட்டே மணிமேகலை வெளியேறி விட்டார். அதே போல் டைட்டில் பட்டதை பிரியங்கா தான் பெற்றிருந்தார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது. பின் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி:
பின் இந்த முறை சர்ப்ரைஸ் ஆக பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து நிகழ்ச்சி தொடர்பாக ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை இரண்டு நடுவர்கள் உடன் மூன்றாவது நடுவர் களமிறங்கி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை செஃப் கௌஷிக். மேலும், இந்த நிகழ்ச்சி மே நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் லட்சுமி ராமகிருஷ்ணன், செம்பருத்தி ஷபானா, பிரியா ராமன், உமர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி இருக்கிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன்-விஜய் சேனல் சண்டை:
இது ஒரு பக்கம் இருக்க, சில வருடங்களுக்கு முன்பே லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் விஜய் டிவி சேனலுக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தது அனைவரும் அறிந்ததே. இதனால் தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இவர் சொல்லும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக்கை கிண்டல் செய்யும் வகையில் ராமர் விஜய் டிவியில் நடித்திருந்தார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்குப்பின் இருவருக்கும் இடையே சுமூகமாக பேச்சு வார்த்தை முடிந்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி:
அதற்குப் பின்னர் தான் இவர் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணன், பழைய பிரச்சினை அது. அப்பவே முடிந்தது. அதே ராமரை வைத்து நான் நிகழ்ச்சியையும் நடத்தியது எல்லோருக்குமே தெரியும்.
அன்னைக்கு கோபம் இருந்தது. அதனால் தான் இத்தனை வருஷம் ஆக சேனல்ல கூப்பிட்டும் நான் தவிர்த்து வந்தேன். இப்ப இந்த நிகழ்ச்சி குறித்து இயக்குனர் டிமிலிருந்து வேதா என்ற ஒரு பெண் என்னிடம் பேசினார். அவர் பேசின விதம் என்னை ரொம்பவே ஈர்த்தது. அதனால் தான் நான் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டேன். அது மட்டும் இல்லாமல் எத்தனை நாள் தான் சீரியஸாகவே இருக்கிறது. ஜாலியாகவும் சோ பண்ணலாம். அதனால்தான் வந்து விட்டேன். இந்த நிகழ்ச்சி மூலம் கூட நான் நினைக்கிற செய்திகளை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன், பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.






