அப்புறம் ஏன் மேடம் உங்கள் மகள்களை ஐயர் குடும்பத்தில் கட்டிக் கொடுத்தீங்க – நெட்டிசனுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஷாக்கிங் பதில்.

0
1998
lakshmi
- Advertisement -

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். மேலும், இவர் திரைப்பட நடிகையாகவும் , இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார். இதுவரை 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை ஓமன் நாட்டில் இருந்து பின்னர் 2005ல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார் லட்சுமி.

- Advertisement -

சமீபத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில்., தன் அபார்ட்மென்ட் கம்யூனிட்டியில் வசிக்கும் ஒருவரின் நண்பர் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஏ+ ரத்த வகையை சேர்ந்த யாராவது பிளாஸ்மா தானம் செய்ய முடியுமா என்று பதிவிட்டிருந்தார். இதை கண்ட ட்விட்டர் வாசி ஒருவர் அது என்ன ‘கம்யூனிட்டி’ இதில் கூட ஜாதியா என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், தான் ஜாதியை பற்றி பேசவில்லை, கேட்டட் கம்யூனிட்டியை பற்றி சொன்னதாக விளக்கம் அளித்தார். அதன் பின்னரும் சிலர் லட்சுமி ராமகிருஷ்ணன் மத வெறி உடையவர் என்று விமர்சித்து வந்தனர்.மற்றொரு ட்விட்டர்வாசி ஒருவர் அப்புறம் ஏன் மேடம் உங்கள் மகள்களை ஐயர் குடும்பத்தில் கட்டிக் கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணனோ, தங்கள் துணையை அவர்களே தேர்வு செய்தார்கள், நாங்கள் இல்லை. அதில் ஒருவர் ஐயர் இல்லை. உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement