வாயில அசிங்கமா வருது..! அபிராமியை கிழுத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!

0
304

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை குன்றத்தூரில் உள்ள அபிராமி என்ற பெண், கள்ள காதலனுடன் சேர்ந்து வாழ பெற்ற குழந்தைகளையே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபிராமி குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரபல நடிகையும், தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன், அபிராமியை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Abirami

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சொலவதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். திரைப்பட நடிகையான இவர் பெண்களுக்கு எதிரான பல சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருபவராக இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமிராமகிருஷ்ணனிடம், இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், நான் பார்த்த சில பெண்களுக்கு, கணவர் மனைவிக்கு இடையே ஒரு நட்பு இல்லாமல் இருப்பதால் தான், அந்த ஏக்கத்தில் அந்த அன்பை வேறு ஒருவருடன் தேடுகின்றனர். அதனால் தான் கள்ள காதல் உருவாகிறது. அபிராமி போன்றவர்கள் செய்த தவறு இந்த சமூகத்திற்கே ஒரு அவலம் தான் என்று கூறியுள்ளார்.

abirami 1

அதே போல அபிராமி போன்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேள்விக்கு, என்னால் நம்ப முடியவில்லை, ஒரு தாயால் இப்படி செய்ய முடியுமா. அவள் என்ன சொல்லி இதனை நியாயபடுத்த போகிறார். ஒரு மிக பெரிய தண்டனை அவருக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. என்னால் விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவள் அந்த கொழந்தைகளை கொன்றபோதே ஒரு தாயக இறந்து விட்டால் என்று பதிலளித்துள்ளார்