ஆத்துக்காரர் பக்கத்துல உயிரோடு தான இருக்கார், அப்புறம் ஏன் இப்படி ? – திருமண நாளில் மோசமான கமன்ட் போட்டவருக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

0
262
lakshmi
- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் ஆரோகனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும்.

-விளம்பரம்-
லட்சுமி ராமகிருஷ்ணன் 3 மகள்கள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே - Tamil  Behind Talkies

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். அந்த வகையில் இவர் வனிதாவின் நான்காம் திருமணத்திற்கு பஞ்சாயத்து செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதோடு இவரது நிகழ்ச்சியில் வந்த பெண் ஒருவர் சமீபத்தில் சாமியார் ஆனதை பார்த்து அதற்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

- Advertisement -

சமூக பிரச்சனை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியது:

கடந்த மாதம் கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சனைக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் யுத்தம் செய் படத்தில் மொட்டை அடித்ததற்கான காரணத்தை கூறியிருந்தார். அதில் அவர், தான் பெரியாரின் கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டவர் என்றும் பாரதியாரின் கவிதைகள் மூலம் தான் சினிமாவில் படம் பண்ண முடிந்தது என்றும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். இப்படி இவர் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்ட வீடியோ:

இதனால் இவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதோடு இந்த வயதிலும் இவர் உடல் எடையை குறித்து பயங்கர யாங்காக மாறி இருக்கும் புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும், இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் இவர் தன்னுடைய கல்யாண நாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அது சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அது என்னவென்றால், லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பிப்ரவரி 14ம் தேதி யூட்யூப் சேனலில் திருமண ஆண்டு விழா – 2022 க்கான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

கல்யாண நாளை கொண்டாடிய லட்சுமி ராமகிருஷ்ணன்:

அந்த வீடியோ 13 நிமிடம் சென்றது. அதில் அவர், தன்னுடைய கணவருடன் நேரத்தை செலவிடுவதுவையும், கார் சவாரி மற்றும் கடற்கரை செல்வது போன்ற அழகிய தருணங்களை பதிவிட்டிருந்தார். பின் அவர் திருமணத்தை குறித்தும் கணவரை குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்திருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பலரும் நெகட்டிவ் கமெண்டுகளை போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்னா, அந்த வீடியோவில் இவர் பொட்டு வைக்காமல் இருப்பதை கவனித்து அதைப் பற்றி கருத்து போட்டு வருகின்றனர்.

விமர்சித்த நெட்டிசன்கள்:

அதற்கு சிலர், அமங்கலமா, குங்கும பொட்டு வைக்காமல் போறீங்களே, இந்த அழகுல ஆத்துக்காரர் பக்கத்துல உயிரோட இருக்கார். வெட்டிங் டே கொண்டாடுற லட்சணம்! கேவலம்! என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இதனை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், உங்களைப் போன்றவர்களிடம் பெரியார் மிகக் கடுமையான, கொச்சையான மொழிகள் பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. ஆனால், அப்போதும் நீங்கள் சீரழிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பதில் கூறி இருக்கிறார். இப்படி லட்சுமி ராமகிருஷ்ணன் போட்ட பதிவும், ரசிகர்களின் விமர்சனமும் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement