65 கிராமை வைத்து இந்த தொழிலை துவங்கினேன், கொரோனா காலத்தில் கூட ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவில்லை – நெட்டிசன்களை கவர்ந்த லலிதா கிரண்.

0
1190
lalitha
- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளைத் தொடங்கி தொழில்களில் நடத்தும் நிறுவனங்களில் ஒன்றுதான் லலிதா ஜுவல்லர்ஸ். லலிதா ஜுவல்லரி கடைகள் தமிழ்நாடு முழுவதும் 40 உள்ளது. இந்த கடைகள் மொத்தமும் சேர்த்து வருடத்திற்கு 10000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது இதெல்லாம் லலிதா ஜுவல்லர்ஸ் கடையின் உரிமையாளர் கிரன்குமார் தான் அம்மாவின் 65 கிராம் தங்கத்தை வைத்துக்கொண்டு தொடங்கியது என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ? ஆம் வெறும் 65 கிராம் தங்கத்தை மட்டும் இன்வெஸ்ட்மென்ட் ஆக வைத்து கிரண் குமார் தனது தங்க நகை கடைக்கான பயணத்தை தொடங்கி தமிழ்நாட்டில் இன்றும் தங்க நகை பிசினஸில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். மேலும் அவர் கூறும் சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் பயணத்தில் அவர் மேற்கொண்ட சந்தோஷ, துக்க நிகழ்வுகளை மணம் திறந்து நம்முடன் பேசுகிறார்.

-விளம்பரம்-

நான் விளப்பரத்தில் கூறியது எல்லாம் உண்மையே :-

என்னுடைய கடையின் விளம்பரத்திற்கு நான் வேற ஏதாவது நடிகையை கொண்டு வந்து அவர்களை வைத்துக் கொண்டு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஏன் வேஸ்ட் செய்கிறீர்கள் பாதுகாப்பாக செலவு செய்யுங்கள் என்று அவர்களை வைத்து சொல்வது. அது எடுபடாத ஒரு விஷயம் அதே விஷயத்தை நானே வந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வேஸ்ட் செய்யாதீர்கள். என நான் சொல்லும்போது அது மக்களிடையே நேரடியாக செல்கின்றது அது மட்டும் இல்லாமல் நான் விளம்பரத்தில் சொன்னதெல்லாம் பொய் இல்லை நான் உண்மையாக என் கடையில் என்ன நடக்கிறதோ எந்த நிலவரத்தில் உள்ளதோ அதை மட்டும் தான் சொல்கிறேன். ஒரு பொருளை வைத்து மட்டும் நூறு ரூபாய் சம்பாதிக்க நினைப்பவன் நான் இல்லை 100 பொருளை விற்று 100 ரூபாய் சம்பாதித்துக் கொள்ளலாம் என கிரன்குமார் தெளிவான விளக்கம் கொடுக்கிறார்.

- Advertisement -

தொழில் செய்பவர்களுக்கு கிரண் குமார் தரும் அட்வைஸ் :-

இப்பொழுது பிசினஸ் செய்யும் அனைவருக்கும் தோல்வி வருகிறது என்றால் அதற்காக நீங்கள் சொல்லும் அட்வைஸ் என்றால் அது என்னவாக இருக்கும் என்று அவரிடம் கேட்ட பொழுது. அவர் பதிலளிக்கிறார் முதலில் உங்களுக்கு என்ன தொழில் முழுவதுமாக தெரியுமா அந்த தொழிலில் கடைசி வரை செய்யுங்கள். தோல்வி என்பது எதற்கு வரும் வரை காத்திருக்கிறீர்கள் தோல்வி வருவதற்கு முன்பாகவே அதை சரி செய்ய வேண்டும். முதலில் பிசினஸ் செய்பவர்கள் கையில் ஒரு பேனாவும் பேப்பரும் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை முதலில் கண்டுபிடிங்கள். அதை சரி செய்யுங்கள் எப்படி நீங்கள் செய்கிறீர்கள் என்றால் தோல்வி எதற்கு உங்களுக்கு வரப் போகிறது அப்படியாக உங்களுக்கு தோல்வி வந்தாலும் மனம் தளராமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள் என தெளிவான அறிவுரை தருகிறார்.

நகை வாங்குவது சரியா, தவறா :-

நகை வாங்குவது சரியா, தவறா ? என அவரிடம் கேட்கும் பொழுது, கிரண் அவர்கள் பதிலளிக்கிறார் நகை வாங்குவது 1௦௦% சரியானது. நீங்கள் இப்பொழுது ஒரு இடத்தை அவசரமாக விற்க வேண்டி இருக்கிறது என்றால் வாங்குபவன் உங்கள் நிலைமையும் உங்கள் அவசரத்தையும் அவனுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு கோடி ரூபாய் கொடுங்கள் தருகிறேன் என்று விலை பேசுவான். ஆனால் தங்கம் அப்படி இல்லை நீங்கள் வைத்திருக்கும் தங்கம் எப்பொழுது எங்கு போய் கொண்டு கொடுத்தாலும் ஒரே விலை தான். ஆகையால் தங்கம் வாங்குவது மிகவும் சரியான ஒன்று அதுவும் நீங்கள் கோல்டு பிஸ்கட், கோல்டு காயின் இப்படி வாங்குவதற்கு பதிலாக நகைகளாக நகைகளாக வாங்குவது இன்னும் சிறப்பான ஒன்று. ஏனென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் அதை போட்டு கொண்டு செல்லலாம் இப்பொழுது நீங்கள் ஒரு பிசினஸ் செய்கிறீர்கள் அதில் நஷ்டம் ஆகிவிட்டால் உங்கள் மனைவி அவர்களிடம் இருக்கும் நகையை கொடுத்து மறுபடியும் தொடங்குங்கள் என்று நம்பிக்கை கொடுப்பார்கள். அது மறுபடியும் ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆக தான் செய்யும் நகை வாங்குவது சரியான செயலை இன்று கரண் குமார் கூறுகிறார்.

-விளம்பரம்-

கொரனா காலத்தில் நஷ்டம் ஆனாத ,நீங்கள் எப்படி நேரத்தை செலவு செய்திர்கள் :-

கொரோனா காலங்களில் என் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 25 ஆயிரம் ருபாய்க்கு கீழ் சம்பளம் குறைக்கவில்லை. ஏனென்றால் ஆரம்ப காலகட்டங்களில் எனக்கு குருவாக இருந்தது பசியும், பணம் தான். எனக்கு 65 கிராம் தங்கம் தான் இருந்தது அதனால் எனக்கு அதைப் பற்றி நன்றாகவே தெரியும் எனவே கொரோனா காலகட்டங்களில் வீட்டு வாடகைகளை கம்மி செய்தார்களா இல்லையே அதனால் நானும் சம்பளத்தை குறைக்க விரும்பவில்லை நஷ்டமானால் நஷ்டமாகட்டும் என்று விட்டுவிட்டேன். லாபம் வரும்போது மட்டும் சந்தோஷமாக இருக்கும் நாம் நஷ்டம் வரும் போதும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா கால கட்டங்களில் வீட்டில் சமையல் செய்து அதை சாப்பிட்டு தான் என் பொழுதுகளை கழித்து வந்தேன் என்ன கொரோனா கால கட்டங்களில் அவர் மேற்கொண்ட விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நண்பர்களுடன் சேர்ந்து 2 பெக் போட்டு ஜாலியாக பேசினால் போதும் :-

தொழில் செய்பவர்களுக்கு எப்போதும் அதிகளவில் நண்பர்கள் இருக்க மாட்டார்கள் என சொல்லுவார்கள் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா என அவரிடம் கேட்ட பொழுது அவர் கூறுகிறார். எனக்கு மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள் நண்பர்கள் இல்லைனா வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருக்காது. என் மனைவி என்னை திட்டுகிறார் என்றால் அது சற்று கஷ்டமாகத்தான் இருக்கும் இதே என் நண்பர்க்கு கால் செய்து என் மனைவியை இப்படி திட்டுகிறார் என்று சொன்னால் அவன். அவன் மனைவி அதற்கு மேல் திட்டியதை என்னிடம் கூறுவான் இது அப்படியே ஜாலியாக மறந்து விடும். ஒரு 7 மணி 7.30 மேல் ஆகிவிட்டால் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக இரண்டு பெக் போட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தால் அன்றைய நாளில் என்ன சோர்வும் டென்ஷனும் இருந்தால் அப்படியே மறந்து விட்டு மறுநாள் வழக்கம்போல் எனது வேலைகளை பார்க்க தொடங்கி விடுவேன்
என்று ஜாலியாக பதில் கூறினார்.

லலிதா ஜுவல்லரியின் திருட்டு சம்பவம் :-

மேலும் சமீபத்தில் லலிதா ஜுவல்லரியில் நடந்த திருட்டு சம்பவத்தை பற்றி அவர் கூறுகையில். சம்பவம் நடந்த அன்று எனக்கு கால் செய்து அழுது கொண்டே திருட்டு நடந்து விட்டது என்ற விஷயத்தை கூறினார்கள். ஒரு ஐந்து நிமிடங்கள் கஷ்டமாக தான் இருந்தது. பின்பு என்ன ஆச்சு விடுங்கள் போனால் போகட்டும் ! எத்தனை கிலோ போச்சு என்று கேட்டேன் ? 65 கிலோ 35 கோடி கானா போனால் போகட்டும் விடுங்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஏனென்றால் உண்மையாகவும், நேர்மையாகவும், பொய் பேசாமல் உழைத்து சம்பாதித்தது எங்கேயும் செல்லாது. என் குழந்தைகளிடமும் நான் சொல்லி வளர்க்கும் விஷயம் அதான் இது பண்ணாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் பொய் பேசாமல் செய்து பழகுங்கள் என்று தான் கூறி வளர்த்தேன். அதேபோல் திருட்டு போன நகைகள் 48 மணி நேரத்தில் மொத்த நகைகளும் அப்படியாக வந்து சேர்ந்தது. அதற்கு நான் தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறி நம்மிடைய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

Advertisement