25 ரூபாய் முதல் சம்பளம், இறுதியாக மாத வருமானம் மட்டும் 40 லட்சம் – லதா மகேஷ்கரின் கோடிக் கணக்கான சொத்துக்கள் என்ன ஆனது.

0
519
latha
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான பழம்பெரும் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஹேமா. இவர் 1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார். அதன் பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார். தமிழில் கூட இவர் பல பாடலைப் பாடியுள்ளார். மேலும், லதா மங்கேஷ்கர் இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர்.

-விளம்பரம்-

அதோடு இவர் இந்தியாவின் இசைக்குயில் என புகழ்பெற்றவர். பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை இவர் மூன்று முறை பெற்று இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தாதா சாகேப், பாரத ரத்னா விருது, பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் பாடகியாக மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

லதா மங்கேஷ்கரின் மறைவு:

பிறகு 28 நாட்களாக இவருக்கு தீவிர தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி லதா சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரின் இறப்பு இந்தியாவில் சோகத்தை ஆழ்த்தி இருந்தது. மேலும், இவருடைய மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில கோவிந்த், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல்தெரிவித்தனர்.

லதா மங்கேஷ்கரின் சொத்து விவரம்:

மகாராஷ்டிர அரசு லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அரசு விடுமுறை அளித்துள்ளது. மேலும், அவரது உடல் தாதர் சிவாஜி பார்க்கிற்கு அருகே எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 30000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள லதா மங்கேஷ்கரின் முதல் சம்பளம் வெறும் 25 ருபாய் தான். ஆனால், இறுதியாக அவரது மாத வருமானம் மட்டும் 40 லட்சம் என்று கூறப்படுகிறது. ஆண்டு வருமானம் 6 கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகிறது. மேலும், லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு மட்டும் 50 மில்லியன் Us டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 368 கோடிக்கு மேல் லதா மகேஷ்கரின் சொத்து மதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

லதா மங்கேஷ்கரின் குடும்பம்:

இந்த கோடிக்கணக்கான சொத்துக்கள் தற்போது யாருக்கு போய் சேரப்போகிறது என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. . இப்படி ஒரு நிலையில் லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான சொத்து யாரிடம் போகப் போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. லதா மங்கேஷ்கருக்கு மூன்று தங்கைகளும், ஒரு இளைய சகோதரனும் இருக்கிறார்கள். இப்படி சினிமா துறையில் புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன்னுடைய சகோதரர் ஹிருதயநாத் உடன் தான் கழித்திருக்கிறார் லதா மங்கேஷ்கர்.

யாருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் :

அதுமட்டுமில்லாமல் லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கையும் இவர் தான் செய்தார். ஹிருதயநாத் மிக பிரபலமான இசையமைப்பாளர். தன்னுடைய அக்கா லதா மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் லதா மங்கேஷ்கர் சம்பாதித்த மொத்த சொத்துக்களும் அவருடைய சகோதரர் ஹிருதயநாத்திற்கு தான் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், லதா மங்கேஷ்கர் தன்னுடைய அப்பாவின் பெயரில் பல ஆண்டு காலமாக ஒரு அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். அதனால் லதாவின் அனைத்து சொத்துக்களும் அந்த அறக்கட்டளையின் பெயரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் லதா மங்கேஷ்கரின் சொத்து குறித்த முழு விபரமும் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement