பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு உண்மையான காரணம் இதுதான்

0
177
- Advertisement -

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பற்றிய வதந்திகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஹேமா. இவர் 1949 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் தனது முதல் பாடலை பாடி இசைப் பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

அதன் பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார். தமிழில் கூட இவர் பல பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் இந்திய இசை உலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வரை வலம் வந்தவர். இவர் இந்தியாவின் இசை குயில் என புகழ்பெற்றவர். பின்னணிப் பாடகி காண தேசிய விருதை இவர் மூன்று முறை பெற்று இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், தாதா சாகேப், பாரத ரத்னா விருது, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

லதா மங்கேஸ்வரின் மறைவு:

இப்படிப் புகழின் உச்சத்தில் இருந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருந்தார். பிறகு 28 நாள் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2022 ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரைத் துறையினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். மகாராஷ்டிரா அரசு லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

கடைசி வார்த்தைகள் வதந்தி:

இந்நிலையில் அதான் மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என்ற வதந்திகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில், இந்த உலகில் மரணத்தை விட உண்மையான விஷயம் எதுவும் இல்லை. உலகின் மிக விலை உயர்ந்த கார்கள் எனது வீட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன். என்னிடம் விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், அணிகலன்கள் அனைத்தும் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய உடையில் இருக்கிறேன்.

-விளம்பரம்-

எந்த வசதியும் உதவவில்லை:

மேலும், உலகில் உள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கும் நகர்ந்து கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்தில் இருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறேன். ஒரு காலத்தில் 7 மேக்கப் ஆர்டிஸ்ட்கள் எனது தலைமுடியை செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடி இல்லை. அதனால் நல்லவர்களை நேசியுங்கள், யாரையும் புண்படுத்தாதீர்கள், உங்களால் முடிந்த வரை உதவுங்கள். அன்பாக இருங்கள். ஏனென்றால் அதுதான் உங்களுடன் எப்போதும் வரும் என்றெல்லாம் லதா மங்கேஷ்கர் கூறியதாக இணையத்தில் தவறுதலாக பகிர்ந்து வருகின்றனர்.

kyrzayda rodriguez

உண்மை இதோ:

ஆனால் லதா மங்கேஷ்கர் அவரது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் இது போல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக ‘ஒரு காலத்தில் ஏழு சிகை அலங்கார நிபுணர்கள் தினமும் என் தலையை செய்வார்கள். இப்போது என் தலையில் முடி இல்லை’ என்ற வாசகம் யாரோ ஒரு புற்றுநோயாளி kyrzayda rodriguez தெரிவித்த கருத்தை எடுத்து, லதா மங்கேஷ்கர் பெயரில் பரப்பி இருக்கிறார்கள். ஏனென்றால், லதா மங்கேஷ்கர் இறுதி வரையில் தலைமுடியுடன் காணப்பட்டார். மேலும் அவர் புற்றுநோயால் தான் இறந்தார் என்று எந்த செய்தியிலும் குறிப்பிடவில்லை. மேலும் ,அவரது மரணத்திற்கு multiple organ disfunction syndrome மட்டுமே காரணம் என்று மருத்துவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement