வலிமை படத்தில் மறைந்த பிரபல நடிகரின் புகைப்படம் ? – இவரது மகன் அஜித்தின் நெருங்கிய நண்பர். யார் தெரியுமா ?

0
614
- Advertisement -

வலிமை படத்தின் ரிலீஸ்க்கு முன் பல அப்டேட்கள் வருவதால் ரசிகர்கள் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அனைவரும் எதிர்பார்த்து இருந்த வலிமை படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளார்.

- Advertisement -

வலிமை படத்தின் ரிலீஸ்:

அதுமட்டுமில்லாமல் படத்தில் அம்மா-மகன் தொடர்பான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. வலிமை படத்தின் ரிலீசுக்கு முன் வினோத் போட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர், வலிமை மற்றொரு அதிரடி படம் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனைகளையும் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.

படத்தில் காட்டப்படும் ஜெய் சங்கர் புகைப்படம் :

இதில் வரும் குடும்ப பிரச்சினைகள் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பற்றியதல்ல. ஒரு குடும்பம் சமூகத்திற்குள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியது. ஆகையால் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக வலிமை உள்ளது. வலிமை படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் வெற்றியடையும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் மறைந்த நடிகர் ஜெய் சங்கர் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

படத்தில் ஜெய் சங்கர் கதாபத்திரம்:

படத்தில் நடிகர் அஜித்தின் அப்பாவாக ஜெய்சங்கர் காட்டப்பட்டு இருக்கிறார். மேலும், இப்படத்தில் மறைந்த நடிகர் ஜெய் சங்கர் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால், ஜெய்சங்கருடன் ஒரு படத்தில் கூட நடிகர் அஜித் நடித்தது இல்லை. இந்த நிலையில் வலிமை படம் அந்த குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வலிமை படத்தில் காட்டப்பட்ட ஜெய்சங்கர் உடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர்:

மேலும், ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கரும் நடிகர் அஜீத் குமாரும் நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அஜித் அவர்கள் தன்னுடைய படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் டாக்டர் விஜய் சங்கர் உடன் பொழுதுபோக்கு கழிப்பது தான் அஜித்தின் வழக்கம். டாக்டர் விஜய் சங்கர் என்பவர் தமிழ் சினிமா துறை திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி, காலங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்த ஜெய்சங்கர் அவர்களின் மகன் ஆவார். ஜெய்சங்கர் அவர்கள் உயிரோடு இருக்கும் காலங்களில் இலவசமாக பலமுறை கண் சிகிச்சை முகாம் நடத்தி இருக்கிறார்.

Advertisement