சீரியல் நடிகருக்கு இறுதியாக சித்ரா அனுப்புயுள்ள Voice Note – வைரல் ஆடியோ.

0
2219
madhan

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் ஹோட்டலில் தங்கி இருந்த அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்து இருந்தார். சித்ராவின் மரணச் செய்தியை கேட்டு பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்தார்கள்.

என்னதான் சித்ராவின் மரணம் என்று அறிவிக்கப்பட்டாலும் சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது அவரது தற்கொலைகளில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று தான் பலரும் கூறி வருகிறார்கள் அதேபோல் நடிகை சித்ராவிற்கு அவரது கணவரும் தாயார் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல சித்ரா இறுதியாக பங்குபெற்ற நிகழ்ச்சி குழுவிடம் கூட விசாரணை செய்தனர் போலீசார்.

- Advertisement -

அதே போல சித்ரா இறப்பதற்கு முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் எப்போதும் போல தான் இருந்தார் என்றும், ஆனால் நீண்ட நேரம் அவர் செல் போனில் பேசிக்கொண்டு இருந்தார் என்றும் கூறப்பட்டது. சித்ராவுடன் இறுதியாக நிகழ்ச்சியில் சீரியல் நடிகை சரண்யா வெளியிட்டு வில் கூட அவர் செல் போனில் யாருடனோ பேசிக்கொண்டு தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் சித்ரா தனக்கு அனுப்பிய இறுதியான வைஸ் நோட்டை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகர் மதன்.

சீரியல் நடிகரான மதன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அதே போல நாம் இருவர் நமக்கு இருவர், பொன்மகள் வந்தாள் போன்ற சீரியல்களில் நடித்தவர். இப்படி ஒரு நிலையில் மதனின் பிறந்தநாளுக்கு voice note மூலமாக வாழ்த்துக்களை கூறி இருந்துள்ளார். அந்த வாய்ஸ் நோட்டின் ஆடியோ அவர் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement