இணையத்தில் வைரலாகும் வடிவேல் பாலாஜியின் திருமண புகைப்படம். எப்படி இருந்திருக்கார் பாருங்க.

0
4148
vadivelbalaji
- Advertisement -

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர் மேலும் நடிகர் விஜய் சேதுபதி கூட வடிவேலு பாலாஜியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

- Advertisement -

வடிவேல் பாலாஜியுடன் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பணியாற்றிய என்னம்மா ராமர், பாலா, புகழ், யோகி என்று பல்வேறு நபர்களும் வடிவேல் பாலாஜி யின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள்.மேலும் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு நேரில் செல்லாத பல கலைஞர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.

அப்துல் கலாமுடன் வடிவேல் பாலாஜி

வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு பின்னர் தனது இரங்கலை தெரிவித்த சிவகார்திகேயன் வடிவேல் பாலாஜியின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியிருந்தார். வடிவேல் பாலாஜிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் வடிவேல் பாலாஜியின் சில பழைய புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், வடிவேல் பாலாஜியின் திருமண புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement