ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட இயக்குனர் டி.பி கஜேந்திரனின் படம் – எந்த படம் தெரியுமா?

0
558
- Advertisement -

தமிழ் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டிபி கஜேந்திரன். இவர் நேற்று உடல்நிலை குறைவின் காரணமாக காலமாகினார். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனரான விசு மற்றும் கேஆர் விஜயா நடிப்பில் வெளியாகிய வீடு மனைவி மக்கள் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு இணயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

-விளம்பரம்-

ஆனால் இவரை பெரும் பாலம் காமெடி நடிகராகத்தான் நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம். இவர் நடித்து இயக்கிய மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவை தன்னுடைய தங்கைக்காக பிரபு மாப்பிளையை பார்க்க செல்லும் போது இவர் கூறும் ” 6 மணிக்கு மேல் அவன் அவதாரம் என்னவென்று தெரியாமல் இப்படி வந்து சிக்கிட்டிங்களே” என சொல்லுவது போன்றவை இன்றும் பல மீம்ஸ் டெம்ப்லேட்டுகளில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

மேலும் டி.பி கஜேந்திரன் நடித்த பார்த்திபன் படத்தில் இவரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதனால் மக்களில் பெரும்பாலானோர் இவரை காமெடி நடிகராக மட்டும் தான் பார்த்து வருகின்றனர். ஆனால் டி.பி கஜேந்திரன் ஒரு சிறந்த இயக்குனர் என்பதும் பல ஹிட் படங்களை இயக்கியும் அதில் நடித்தும் இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் இயக்குவதில் ஜாம்பவானாக இயக்குனர் மற்றும் நடிகரான விசுவிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இயக்கிய படங்கள் :

அதற்கு பிறகு அதிலிருந்து கிடைத்த அனுபவத்தை வைத்து பல குடும்ப படங்களை இயக்கி இருக்கிறார். டிபி கஜேந்திரன் தன்னை விசு நடித்த சூப்பர் ஹிட் படமான “வீடு மனைவி மக்கள்” என்ற படத்தின் மூலம் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்தி 90ஸ் கிட்ஸ் விருப்பமான காமெடி படங்களான நடிகர் பிரபு பட்ஜெட் பத்மநாதன, பாண்டி நாட்டு தங்கம், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா, பந்தா பரமசிவம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இருக்கிறார். கடைசியாக 2010 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் மகனே என் மருமகனே என்ற படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

ரீமேக் செய்யப்பட்ட படம் :

மேழும் இவர் கடந்த 2000ஆம் ஆண்டு பிரபு, மணிவண்னன், ராமயா கிருஷ்ணன், விவேக், கோவை சரளா, மும்தாஜ் போன்றவர்கள் நடித்த பஜெட் பத்மநாதன் திரைப்படம் மலையாளத்தில் வெளியான மேட்டுப்பட்டி மச்சான் எந்த படத்தின் ரீமேக் ஆகும் இதனை தமிழில் ரீமேக் செய்திருந்தார் டி.பி கஜேந்திரம். இந்நிலையில் இந்த படத்தை தான் ஹிந்தியில் அசின், அக்ஷய் குமார் போன்றவர்களின் நடிப்பில் ஹவுஸ்புல் 2 என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது குறிப்பிடதக்கது.

Advertisement