கே ஜி எப் 2 படத்தின் மாபெரும் அப்டேட்.! ரசிகர்கள் குஷி.!

0
911
Kgf-2
- Advertisement -

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். 

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is kgf.jpg

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. பிற மொழியில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

- Advertisement -

யாஷ் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பகத்திற்கான பூஜை சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தை பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளனராம். அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement