மணிரத்னம் இயக்கும் வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ்.! அவருக்கு ஜோடி யார் தெரியுமா?

0
422
Keerthy-Suresh

தற்போது உள்ள சினிமா ரசிகர்களில் அனைவரும் ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை படித்திருப்பீர்களா என்பது சந்தேகம் தான். அப்படி நீங்கள் படித்திருப்பீர்கள் என்றால் ‘பாகுபலி’ என்ற கதை எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

This image has an empty alt attribute; its file name is ponniyin-selvan.jpg

வரலாற்று சிறப்புமிக்க இந்த நாவலை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வளவு ஏன் வரலாற்று கதைகளை எடுக்கும் கெட்டிக்காரரான மணிரத்னம் கூட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கவுள்ளார் என்று பல ஆண்டுகளாக ஒரு பேச்சும் நிலவிவருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுப்பதாக திட்டமிருந்தார் மணிரத்னம். ஆனால், அது நடக்காமல் போக விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து இப்படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

Image result for maniratnam

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் கார்த்திக் இணைந்துள்ளதாக நமது வலைதளத்தில் தெரிவித்திருந்தோம். அந்த தகவல் தற்போது உறுதியான நிலையில் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement