சிம்புவின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்..!

0
1044
vrv
- Advertisement -

கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் வரிசையாக படத்தில் நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-

vrv

- Advertisement -

தற்போது வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வரும் சிம்பு மும்மரமாக படபிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிட வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறார் சிம்பு.

இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக மெகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஹிப் ஆப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட் அடைந்த ‘Attarintiki Daredi’ என்ற படத்தின் ரீ மேக் ஆகும்.

-விளம்பரம்-

வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் நாளை (அக்டோபர் 1) வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்த தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் என்பதால் சிம்பு படத்தின் டீசரை 2.0 படத்தின் இடைவெளியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனறாம்.

Advertisement