விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தை தீரன் பட புகழ் வினோத் குமார் இயக்குகிறார்.
இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த படத்தை முதலில் தனது சொந்த கதையில் எடுப்பதாக தான் இருந்தார் வினோத். ஆனால், போனி கபூரிடம் பிங்க் படத்தின் ரீ-மேக் உரிமை இருந்ததால் அதற்கு சம்மதிக்கவில்லை.
அதே போல அஜித்தின் 60வது படத்தையும் போனி கபூர் தயாரிக்க இருப்பதால் அந்த படத்தில் வினோத்தின் சொந்த படத்தை வினோத்தின் சொந்த கதையில் எடுக்க வினோத்திற்கு உறுதியளித்தார் போனி கபூர். அதனால் பிங்க் பட ரீ-மேக்கிற்கு சம்மதித்தார் வினோத்.
இந்த நிலையில் அஜித்தின் 60 வது படமும் ரீ-மேக் என்று தான் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த 60வது படம் எகிப்திய படமான Hepta:The Last Lecture என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இதில் வரும் கதாநாயகன் ஒரு மருத்துவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.