அஜித் பயன்படுத்தும் அதே மாடல் பைக்கை வாங்கி கெத்தாக போஸ் கொடுத்த விஜய் சேதுபதி.! பைக் நம்பரை பாருங்க.!

0
1462
Ajith-and-vijay-sethupathi
- Advertisement -

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கப்படும் அஜித் சிறந்த நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு கார் மற்றும் பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது படங்களில் கண்டிப்பாக கார், பைக் போன்ற காட்சிகள் இடம்பெறாமல் இருந்தது இல்லை. 

-விளம்பரம்-

தற்போது வெளியாக போகும் விஸ்வாசம் படத்திலும் பைக் ஸ்டன்ட் செய்துள்ளார் அஜித். மேலும், அவரது வீட்டில் எண்ணற்ற விலையுயர்ந்த கார் மற்றும் பைக் கலெக்ஷன்கள் உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

- Advertisement -

தமிழ் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருபவர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அந்த படத்தின் இயக்குனருக்கு புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

அஜித் பயன்படுத்தும் Bmw பைக்கில் போஸ் :

இந்த நிலையில் விஜய் சேதுபதி விலை உயர்ந்த BMW பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் மூன்றரை லட்சம் ருபாய் என சொல்லப்படுகிறது. இந்த வகை பைக்கை தமிழ் திரையுலகில் அஜித் தான் பயன்படுத்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல விஜய் சேதுபதி தனது பிறந்த வருடமாக 1979 என்ற நம்பரிலேயே வாங்கியுள்ளார்.!

-விளம்பரம்-
Advertisement