விஜய் 64 படத்தின் இயக்குனர் மணிரத்னமான..!வெளியான புதிய தகவல்..!

0
1064
manirathnam
- Advertisement -

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார்களை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்றால் அது இயக்குனர் மணி ரத்தினத்தால் மட்டுமே முடியும். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “செக்க சிவந்த வானம் ” எனும் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடைந்துள்ளது.

-விளம்பரம்-

manirathnamvijay

- Advertisement -

மணிரத்னம் இதுவரை ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, மாதவன் என்று பலரையும் வைத்து படத்தை இயக்கிவிட்டார். அவ்வளவு ஏன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திகை வைத்தும் படத்தை இயக்கிவிட்டார். ஆனால் தமிழ் சினிமாவின் தல தளபதியை வைத்து இதுவரை ஒரு படம் கூட எடுக்கவில்லை என்பது ஒரு பெரிய குறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் சிம்புவை வைத்து இயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து விஜய் தரப்பு தெரிவிக்கையில், விஜய் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் எந்த படமும் இல்லை என்றும் விஜய் அடுத்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிஸியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-

ஆனால், சமீபத்தில் வெளியான “செக்க சிவந்த வானம்” படத்தில் இயக்குனர் மணிரத்னதுடன் கதை, திரைக்கதை அமைப்பதற்கு உதவியாளராக இருந்து வந்தவர் இயக்குனரும், எழுத்தாளருமான சிவா ஆனந்த். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, கண்டிப்பாக விஜய் மற்றும் அஜித்துடன் இயக்குனர் மணி ரத்னம் பணியாற்றுவர். அதற்கான கதையும் உருவாகி வருகிறது என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement