விஜய் 64 படத்தின் கதை என்ன.! இயக்குனர் சொன்ன பதில்.! லேட்டஸ்ட் அப்டேட்.!

0
1147
vijay-64
- Advertisement -

தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வருவது இளையதளபதி விஜய்.இளையதளபதி விஜய் அவர்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவர் மனதில் இடம் பிடித்து மக்களால் பெரும் அளவில் பேசப்பட்டு வரும் ரியல் ஹீரோ. தெறி, மெர்சல் போன்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அட்லி தான் விஜய்யின் 63 வது படத்தை இயக்கியுள்ளார்.விஜய் 63வது படமான “பிகில்” படம் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். இந்த பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. விஜய்யின் 63 வது படமான பிகில் படத்தை தீபாவளி அன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Image

மேலும், பிகில் படத்தின் விளம்பரங்களும், போஸ்டர்களும் பொதுமக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் உற்சாகத்திலும் , கொண்டாட்டத்திலும் உள்ளார்கள். இதைத்தொடர்ந்து மாநகரம் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் விஜய் 64வது படம் வர போகிறது என்ற தகவல் பகிரங்கமாக வெளியிட்டார்கள் .விஜய் 64 படத்தை எக்ஸ்பி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இதில் அனிருத் தான் இசை அமைப்பாளர் என்ற தகவல்கள் வெளிவந்தது.மேலும் இப்படத்தை சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்றும் வெளியானது.

- Advertisement -

இதையும் பாருங்க : வனிதாவை சந்திக்க சென்ற உறவினர்.! வனிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்.!

இப்படத்திற்கு தற்காலிகமாக விஜய் 64 என்ற டைட்டில் வைத்துள்ளார்கள். விஜய் 64வது படம் அக்டோபர் மாதம் நான்கு முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என படக்குழுவினர் மீடியாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். மேலும் இந்த படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையுலகிற்கு வரும் என்று அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் தெரிவித்தார்.

-விளம்பரம்-
Image result for vijay 64

விஜய்64 படத்தை குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, பிகில் படம் திரையுலகிற்கு வருவதற்கு முன்னரே அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் சீக்கிரமாக சமூக வலைதளங்களில் பரவியது .ஆனால் விஜய் 64 படத்தின் கதை குறித்து எந்த தகவலும் நான் கூறமாட்டேன் என்று கண்டிப்புடன் சொன்னார் . முதலில் இளைய தளபதியின் பிகில் படத்தை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுங்கள் என்று கூறினார். இப்போதெல்லாம் நான் புது படங்களை குறித்து விரைவாகவே மீடியாக்களில் பேசிவிடுகிறேன் என்று நகைச்சுவையுடன் கூறினார். ஆனால் என்னால் கதைகளை பற்றி குறித்த தகவல்களை கூற முடியாது என்று கண்டிப்பாக கூறினார்.மேலும் அவர் கார்த்திக்கை வைத்து இயக்கி வரும் கைதி படத்தை பற்றி தான் கூறினார். கடைசியாக அவர் கூறியது, திரை உலகில் இதுவரை விஜயை பார்த்திருக்காத அளவில் இந்த விஜய் 64 படம் பிரம்மாண்டமான அளவில் இருக்கும் என்ற தகவல் மட்டும் கூறினார்.

இதனால் ரசிகர்களுக்கிடையே நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்றும் வெளி வந்தது.அதுமட்டுமில்லாமல் இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் விஜய் 64 படம் குறித்து வலைத்தளங்களில் தளபதி 64 என்ற ஹேஸ்டேக் என்ற புதிய வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதில் ரசிகர்களின் கருத்து குறித்து பகிர்ந்து வருகிறார்கள் இந்த தகவல் அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement