லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி ஊழியர்கள் போராட்டம் – ஏற்கனவே 1.99 கோடி வாடகை பிரச்சனை இப்போ இது வேற.

0
1091
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் ஆஸ்ரம் பள்ளி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் ஒன்றரை ஆண்டு காலமாக ஆஸ்ரம் பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை என்று லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியின் முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
லதா ரஜினிகாந்தின் கிண்டி ஆஸ்ரம் பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம் | Latha  Rajinikanth's Guindy School shifted - Tamil Oneindia

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டை கண்டித்து ஊழியர்கள் இன்று பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் பாருங்க : படப்பிடிப்பு முடிந்தாலும் ரஸ்யாவில் இருந்து திரும்பாத அஜித் – பைக்கில் பிளான் செய்துள்ள வேர்ல்ட் டூர்.

- Advertisement -

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஊழியர்கள் கூறியிருப்பது, கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை. எங்களை மிகவும் கஷ்டப்படுத்துக்கிறார்கள். ஊதியம் குறித்து கேட்டால் தொடர்ந்து இழுத்துக் கொண்டே காலத்தை தள்ளுகிறார்கள். நாங்கள் இந்த காலத்தில் பயங்கரமாக சிரமத்தில் உள்ளோம். தயவு செய்து ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்தாவது எங்களுடைய ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே லதா ரஜினிகாந்த் அவர்கள் ஆஸ்ரம் பள்ளிக்கு வாடகை கட்டவில்லை என்ற புகார் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளராக லதா ரஜினிகாந்த் பதவி வகித்து வருகிறார். இவர் சென்னை கிண்டியில் ஆஷ்ரம் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இந்த பள்ளி அமைந்துள்ள இடம் வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் ஆகியோருக்குச் சொந்தமானது. இந்த இடத்தோட வாடகை பாக்கி 1.99 கோடி ரூபாயை ராகவேந்திரா கல்வி சங்கம் செலுத்தவில்லை என்றும், பள்ளியை காலி செய்து தருமாறும் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

-விளம்பரம்-
Extension of time for Lata Rajinikanth to vacate school premises || வாடகை  பாக்கி விவகாரம்: பள்ளி வளாகத்தை காலி செய்ய லதா ரஜினிகாந்த்திற்க்கு கால  அவகாசம் நீட்டிப்பு

பின் இந்த வாடகை பிரச்சனை 2018ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், எந்த ஒரு மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பயங்கர கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வெளிவந்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காத பிரச்சனை வெடித்து வருகிறது.

Advertisement