என்கிட்ட சொல்லாம செஞ்சிட்டாங்க.! கடுப்பில் காஞ்சனா இந்தி ரீ-மேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.!

0
610
- Advertisement -

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனியில் ஆரமித்து காஞ்சனா-2 வரை அனைத்து பாகங்களுமே ஹிட் ஆனா நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் காஞ்சனா-2 திரைப்படத்தை இந்தியில் இயக்க திட்டமிட்டிருந்தார். இதில் இந்தி நடிகர் அக்சய் குமார் நடிப்பதாக இருந்தது.

-விளம்பரம்-

கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்திற்கு லட்சுமி பாம் என்று பெயர் வைத்து சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

- Advertisement -


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். .  அக்‌ஷய் குமார், இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் விஷயம் தனக்கு தெரிவிக்கப்படவில்லை. தன்னைக் கேட்டு அலோசித்தும் செய்யவில்லை என தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார் லாரன்ஸ் 

அதில், இப்படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது என்னவென்றால் ” மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற தமிழ் முதுமொழி ஒன்று உள்ளது அதன் படி நான் ‘லக்ஷ்மி பாம்ப் படத்திலிருந்து வெளியேறவுள்ளேன். பணம்,பெயர், புகழைக் காட்டிலும் சுயமரியாதை என்பது இந்த உலகத்தில் மனிதனுக்கு மிகவும் முக்கியமானது.

-விளம்பரம்-

இப்படத்திலிருந்து வெளியேறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. முக்கியமான ஒன்று ஃபர்ஸ்ட்லுக். என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்ததை மூன்றாவது ஆள் சொல்லிக் கேட்டேன். இந்த ஃபர்ஸ்ட் லுக் எனது கவனத்திற்கு கொண்டு வராமலேயே வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரின் டிசைனும் திருப்தியளிக்கவில்லை. தனது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாவதை இன்னொருவர் மூலம் அறிந்து கொள்வது ஒரு இயக்குநருக்கு மிகுந்த வேதனையளிக்கக்கூடிய ஒன்று.

நான் மிகுவும் அவமதிக்கப்பட்டதாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் நினைக்கிறேன். இந்த கதை படமாவதை  நான் தடுக்கமுடியாது, அது தொழில் நேர்மையும் அல்ல. அக்‌ஷய் குமார் சார் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சீக்கிரமே அவரை பார்த்து இக்கதையைக் கொடுத்துவிடுவேன்.  இந்த  மாதிரி விஷயம் வேறு எந்த இயக்குநருக்கும் நடக்கக்கூடாது.’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement