வலிமை இயக்குனர் மீதும், தயாரிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். இதான் காரணம்.

0
350
valimai
- Advertisement -

சமீபத்தில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக அந்த படத்தின் இயக்குநர் வினோத், மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார்.

- Advertisement -

1000 திரையரங்குகளில் ரிலீசான வலிமை :

அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் காண்பித்து இருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.ந்த படம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 900க்கும் அதிகமான திரையரங்களில் வெளியானதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோர் படங்கள் கூட 700 முதல் 800 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும். இந்த நிலையில் வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

வலிமை படத்தின் மீது வழக்கறிஞர் புகார் :

இந்த நிலையில் வலிமை படத்தின் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக அந்த படத்தின் இயக்குநர் வினோத், மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  உயர் நீதிமன்றப் பெண் வழக்கறிஞர் சாந்தி இன்று (பிப்.28) புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

வழக்கறிஞர்களை குற்றவாளிகளை போல் சித்தரித்துள்ளனர் :

‘கடந்த 24 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்ததாகவும், அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் வழக்கறிஞர்களை குற்றவாளிகளை போல் சித்தரித்தும், குற்றச் செயல்புரியும் குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போலவும் காட்சிப்படுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு பணியை ஆற்றி வரும் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தி காட்சியமைப்பதும், ஒருசில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவதும் கண்டனத்துக்கு உரியது.

காவல் துறை தரப்பில் உறுதி

காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறி இருக்கிறார். மேலும் பேசிய அவர், எத்தனை சினிமா நடிகர், நடிகைகள் போதை வழக்கில் சிக்கியுள்ளனர். அதை மையமாக வைத்து எந்தத் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஏன் படம் எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார். மேலும் இப்புகாரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் வலிமை படக்குழுவிற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

Advertisement